actor suresh gopi arrest

மலையாள திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் தொடர்ந்து, வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கி வருகின்றனர் . அந்த வகையில் நடிகை அமலாபால், பகத் பாசில் இருவரும் ஏற்கனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து தற்போது, பிரபல மலையாள நடிகரும், எம்.பி யான சுரேஷ் கோபி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சொகுசு கார் வாங்கியதில் ரூ.20 லட்சம் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து கேரள மாநிலத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகை அமலாபால், நேற்று குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார். மேலும் அவர் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றிருந்தார்.

அதே போல் வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக நடிகர் சுரேஷ் கோபியும் ஆஜரானார், அவரை போலீசார் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. பின் ரூ.1 லட்சம் பிணைத் தொகையாகவும் மற்றும் இரு நபர் ஜாமீனில் அவர் வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது. இச் சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.