கடந்த 10 நாட்களாக கேரளாவில் பெய்த கனமழை அம்மாநில மக்களை உலுக்கிப் போட்டது. கடவுளின் தேசம் என்று செல்லமாக அழைக்கப்பட்டு சந்த கேரள பூமி தற்போது உருக்குலைந்து காணப்படுகிறது.

கனமழை , நிலச்சரிவு போன்றவற்றால் கேரளத்துக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகள், அரசியல் பிரபலங்கள், மற்ற மாநில அரசுகள் கேரளாவுக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

கத்தார் நாடு 35 கோடி ரூபாயும். ஐக்கிய அரபு எமிரேட் 700 கோடியும் நிதியுதவி அறிவித்துள்ளது. இன்னும் தனிப்பட்ட முறையில் சில தொழிலதிபர்கள் கேரளாவுக்கு அள்ளிக்கொடுத்து வருகின்றனர்.

இது தவிர தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா மாகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்கள்  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் நடிகை சன்னி லியோனும் கேரளாவிற்காக ரூ 5 கோடி ருபாய் நிதியளித்துள்ளார். மற்ற நடிகர் நடிகைகளை விட சன்னி லியோன் கொடுத்த தொகை அதிகம் என்பதால் அவரது உதவி மனப்பான்மையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

இது உண்மையா என சன்னி லியோன் தரப்பை அணுகியபோத, இதற்கான விளம்பரம் முக்கியமல்ல. கேரளம்  மீளவேண்டும் என்கிற என் பிரார்த்தனையை மட்டுமே செய்தியாக  மக்களுக்குச் சொல்லுங்கள் என்று செய்தியாளர்களிடம் சன்னி லியோன் தெரிவித்தாக் பிரபல பத்திரிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது..

சில மாதங்களுக்கு முன்பு கொச்சியில் நடந்த நகைக் கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்த நடிகை சன்னி லியோனைப் பார்க்க ரசிகர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர். அவர்களது அன்பில் நெகிழ்ந்து போன சன்னி லியோன் கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

சன்னியின் இந்த தாராள மனதைப் பாராட்டியுள்ள நெட்டிசன்கள் நமது பாலிவுட் பிரபலங்கள் எங்கே போனார்கள்? எங்கே யோகி ராம் தேவ்? ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்? அம்பானி? பிற வியாபார பெரும் புள்ளிகளெல்லாம்  இந்தக் கடுமையான நெருக்கடி நேரத்தில் எங்கே போய் தெலைந்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.