ஏ.ஆர்.முருகதாஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் தர்பார். இதில் மிரட்டல் வில்லனாக வந்து அசத்தியிருந்தார் சுனில் ஷெட்டி. தற்போது மலையாளத்தில் மரைக்காயர்; அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மோகன் லால், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், சுஹாசினி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

உடல்நிலை சரியில்லாமல் இருந்த அப்பாவிற்காக கடந்த 4 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார் சுனில் ஷெட்டி. தற்போது தர்பார் படத்தில் தான் தலையை காட்டினார். இந்த சமயத்தில் பிரஸ்மீட் ஒன்றில் அவரது மகளைப் பற்றி தேவையில்லாமல் கேள்வி கேட்டு மீண்டும், தலைமறைவாக்கிடுவாங்க போல இருக்கு. 

இதையும் படிங்க: 'ஐயம் பேக்'... விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கும் ஜெயஸ்ரீ... வைரலாகும் அதிரடி அறிவிப்பு...!

சுனில் ஷெட்டி மகள் அதியா ஷெட்டி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவரும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. இருவருக்குமிடையே காதல் பூ பூத்துக்குலுங்குவதாக மீடியாக்களில் வதந்தி பரவிய நிலையில், சம்மந்தப்பட்ட இருவரும் அதனை மறுத்து வந்தனர். 

இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக பிரபல நடிகையிடம் தூது போன நயன்தாரா... கோலிவுட்டில் பரபரப்பு...!

இந்நிலையில் சுனில் ஷெட்டியிடம் கே.எல்.ராகுல், அதியா ஷெட்டி காதல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனால் செம்ம டென்ஷன் ஆன சுனில், நான் என் பொண்ணு கூட இப்ப உறவில் இல்லை. நீங்க தான் அதை போய் அதியாவிடம் கேட்க வேண்டும். கேட்டுட்டு வந்து சொல்லுங்க, அப்புறம் நான் பேசிக்கிறேன். உங்களுக்கே முதல்ல உண்மை தெரியல. அப்புறம் எப்படி என்கிட்ட வந்து இப்படி கேட்கிறீங்க? என கடுப்பாக பதிலளித்துள்ளார்.