தமிழில்,  இயக்குனர் ராஜமவுலி இயக்கிய 'நான் ஈ ' படத்தில் முரட்டு வில்லனாக நடித்து, தன்னுடைய நடிப்பில் மிரட்டி  இருந்தவர் நடிகர் சுதீப்.  இந்த படத்தை தொடர்ந்து, விஜய் நடித்த 'புலி',  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான 'முடிஞ்சா இவன புடி' ஆகிய படங்களில் நடித்தார்.

கன்னட நடிகரான இவர்,  தற்போது இயக்குனர் சிவகார்த்தி இயக்கத்தில், 'கோர்ட் கோபா 3 ' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மடோனா செபஸ்டீன், ஷ்ரத்தா தாஸ், ஆகிய நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட அரங்கில் பிரம்மாண்டமாக செட் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் எடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நடிகர் சுதீப் கீழே விழுந்தார். அப்போது அவருக்கு முதுகு தண்டுவடத்தில் பலமாக அடிபட்டது.  இதில் வலியால் துடித்த அவரை படக்குழுவினர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தீவிர சிகிச்சைக்கு பின், கீழே விழுந்ததில், இவருடைய முதுகெலும்பு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் கடந்த இரண்டு வாரங்கள் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என  மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.  எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மற்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் . எனினும் படம் ஏற்கனவே அறிவித்தது போல் கிறிஸ்மஸ் தினம் அன்று  வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.