நடிகை ஹன்சிகா தமிழில் இறுதியாக பிரபுதேவாவுடன் நடித்த குலேபகாவலி திரைப்படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த ஹன்சிகா, எப்படியாவது ஹிட்டு கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:  படுகவர்ச்சி உடையில்... பேஷன் ஷோவில் ஒய்யார நடைபோட்ட ”மாஸ்டர்” பட நாயகி...வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்...!

இருப்பினும், முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே அதிகளவில் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் மஹா.

இதையும் படிங்க: கடலையே கொந்தளிக்க வைத்த கஸ்தூரி... கடற்கரையில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி அதகளம்...!

காவி உடையில் ஹன்சிகா சுருட்டி பிடிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. அதை கூல் செய்யும் விதமாக ஹன்சிகா மீது சிம்பு ஹாயாக படுத்து கொண்டிருப்பது போல், ரொமான்டிக் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  

சிம்பு - ஹன்சிகாவின் லவ் பிரேக்கப்பிற்கு பிறகு கடந்த மாதம் இருவரும் ஒன்றாக பங்கேற்ற மஹா படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. அதில் பைலட் கெட்டப்பில் செம்ம ஸ்டைலாக நடித்த சிம்புவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி லைக்குகளை குவித்தது. படத்தில் 40 நிமிடங்கள் மட்டுமே வரும் கெஸ்ட் ரோலில் ஜமீல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. 

இதையும் படிங்க: தர்ஷனை கதறவிட்டு... காதலர் தினத்தில் துள்ளாட்டம் போட்ட சனம் ஷெட்டி... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

இந்நிலையில் மஹா படத்தின் இயக்குநர் இந்த படத்தில் வில்லனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அத்துடன் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஜெயிலில் தம்பி ராமையா மற்றும் கருணாகரன் ஆகியோரின் கையில் உள்ள துப்பாக்கிகளின் முனையில் ஸ்ரீகாந்த் முகத்தில் புன்னகையுடன் உட்கார்ந்து கொண்டிருப்பது போன்று உள்ளது.