போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Actor Srikanth Arrested

தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை போதைப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு திரையுலகை சேர்ந்தவர்களும் விதிவிலக்கல்ல. திரையுலகில் இருப்பவர்களும் பிறந்தநாள் மற்றும் படத்தின் வெற்றி விழா பார்ட்டிகளில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட ‘தக் லைஃப்’ படத்தின் “முத்த மழை..” பாடலை தெலுங்கில் பாடகிய பாடகி மங்லி என்பவர் தனது பிறந்தநாள் பாட்டியில் போதைப்பொருள் விநியோகித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்

இந்த நிலையில் தற்போது தமிழின் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஐடி விங்-ல் பணியாற்ற பிரசாந்த் என்பவர் மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்த விசாரணையில் அவர் வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்கள் வாங்கியது தெரியவந்துள்ளது. மேலும் அதை நடிகர் ஸ்ரீகாந்துக்கு வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். நுங்கம்பாக்கம் மதுபான விடுதியில் நடந்த மோதல் வழக்கில் கைதான பிரசாந்த் ஸ்ரீகாந்திருக்கு கொக்கேன் உள்ளிட்ட போதைப் பொருட்களை வழங்கியதாக போலீஸில் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து ஸ்ரீகாந்தை போலீசார் ரகசியமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீகாந்துக்கு ரத்தப் பரிசோதனை

மேலும் அவருக்கு இரத்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நடிகர் ஸ்ரீகாந்த் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா கூட்டம்’ என்கிற தமிழ் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகராகவும் விளங்கி வருகிறார். அதன் பின்னர் மனசெல்லாம், வர்ணஜாலம், கனா கண்டேன், ஒருநாள் கனவு, பம்பரக் கண்ணாலே, மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை, பூ, சதுரங்கம், நண்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘பார்த்திபன் கனவு’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட சிறப்பு விருதும் கிடைத்தது.

போலீஸார் தொடர் விசாரணை

தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் சில காலம் பட வாய்ப்புகள் ஏதும் என்று இருந்தார். இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் அவர் நடித்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அவர் நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’. அதன்பின்னர் இவருக்கு எந்த பட வாய்ப்புகளும் அமையவில்லை. இந்த நிலையில் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ளார். நுங்கம்பாக்கம் மதுபான விடுதியில் போதை பொருள் விநியோகித்த அதிமுக பிரமுகர் பிரசாந்த் என்பவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தினாரா? அல்லது அவரது பெயர் தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.