பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சீராகி வந்த அவருடைய உடல் நிலை திடீரென கடந்த 14ம் தேதி கவலைக்கிடமானது. தற்போது எஸ்.பி.பி.க்கு வென்டிலேட்டர்  சப்போர்ட் உடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவக்குழுவினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பூரண நலமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென ரஜினிகாந்த், கமல் ஹாசன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், பாரதிராஜா, சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும்  நாளை (20-8-2020(வியாழக்கிழமை))  மாலை 6 மணிக்கு  எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு திரையுலகினர் மற்றும் பொதுமக்களுக்கு இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதையும் படிங்க: “மெர்சல்” படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?... முதன் முதலாக மனம் திறந்த ஜோதிகா...!

இந்நிலையில் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டி காமெடி நடிகர் சூரி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  ‘எஸ்.பி.பி சார், விவரம் தெரிஞ்சு.. உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாளக் கூட கடந்ததில்ல.. விடியக்கால நடந்தாலும் சரி.. வீட்ல விசேஷம்னாலும் சரி, தாலாட்டி எங்கள தூங்க வைக்கிறதும் சரி, தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் சரி, எப்பவுமே உங்க பாட்டுத்தான்.. எப்பவும் போல இதே சிரிச்ச முகத்தோட நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாடனும்... உங்க குரல் கேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க ஓடனும்னு ஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன்..’ என குறிப்பிட்டுள்ளார்.