முழுசா Rugged ஸ்டைலுக்கு மாறிய சூரி.. சொக்கனாக களமிறங்கும் அடுத்த படம் - வெளியானது கருடன் Title Glimpse Video!
Actor Soori New Movie : பிரபல நடிகர் சூரியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது, முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார் சூரி.
கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான பிரபல நடிகர் மம்மூட்டியின் "மறுமலர்ச்சி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலக அட்மாஸ்பியர் ஆர்டிஸ்டாக களம் இறங்கியவர் தான் நடிகர் சூரி. அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் துணை நடிகராக அவர் நடித்து வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான "வெண்ணிலா கபடி குழு" என்கின்ற திரைப்படத்தில் சுப்பிரமணி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் புகழ்பெற்றார்.
அவர் அதைத் தொடர்ந்து அவருடைய நடிப்பில் வெளியான "களவாணி" மற்றும் "நான் மகான் அல்ல" போன்ற பல திரைப்படங்கள், மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்த சூரி, கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் "விடுதலை" திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும் ஆக்சன் ஹீரோவாகவும் களமிறங்கினார்.
அந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இப்பொழுது உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் கதையில் பிரபல நடிகர் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் நடிக்கும் "கருடன்" என்கின்ற திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் "சொக்கன்" என்று கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் நடிகர் சூரி.
இந்த திரைப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவிருக்கிறார், பிரபலன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்பொழுது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒரு கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.