Asianet News TamilAsianet News Tamil

தடையை மீறிய சூரி, விமல்... தீவிரமடையும் விசாரணை... அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை...!

இ-பாஸ் இல்லாமல் எப்படி கொடைக்கானலுக்குள் நுழைந்தார்கள் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர்களுக்கு கார் கொடுத்து ஊர் சுற்ற உதவிய காதர் பாட்சா என்பவர் கண்டறியப்பட்டுள்ளார். 

Actor Soori and Vimal Epass issue Kodaikanal tour vehicle seized by police
Author
Chennai, First Published Jul 31, 2020, 7:26 PM IST

கடந்த சில நாட்களாகவே நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரியில் மீன்பிடித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.  கடந்த 17ம் தேதி நடிகர்கள் விமல், சூரி ஆகியோருடன் இரண்டு இயக்குநர்கள் உட்பட சிலர் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் தடைமீறி சுற்றித்திரிந்தது சர்ச்சையை கிளப்பியது. எவ்வித அனுமதியும் இன்றி ஏரிக்கு அருகேயுள்ள விடுதியில் தங்கியிருந்த நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்டோர் தடையை மீறி ஏரியில் மீன்பிடித்ததாக மகேந்திரன் என்பவர் கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  

Actor Soori and Vimal Epass issue Kodaikanal tour vehicle seized by police

இதையடுத்து நடந்த விசாரணையில் சூரி, விமல் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறை சரக கண்காணிப்பாளர் தேஜஸ்வி, தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் இனி அத்துமீறி நுழைய கூடாது என நடிகர்கள் இருவருக்கும்  எச்சரிக்கை விடுத்தது தெரியவந்தது. விமல், சூரி அத்துமீறி நுழைந்தது குறித்தும் வனத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர்கள் சூரி, விமலுக்கு உதவியதாக வேட்டை தடுப்பு காவலர்கள் மூன்று பேரை வனத்துறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

Actor Soori and Vimal Epass issue Kodaikanal tour vehicle seized by police

 

இதையும் படிங்க: ராஜமாதா கெட்டப்பில் வனிதா... தீயாய் பரவும் போட்டோவை பார்த்து கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

நடிகர்கள் முறையாக இ பாஸ் பெற்று தான் வந்தனரா என்பது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொடைக்கானல் காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்ய கோட்டாட்சியர் சிவக்குமார் பரிந்துரையின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இ-பாஸ் பெறாமல் தடையை மீறி கொடைக்கானல் வந்த நடிகர்கள் விமல், சூரி மீது பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், தொற்று நோய் பரவும் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Actor Soori and Vimal Epass issue Kodaikanal tour vehicle seized by police

 

இதையும் படிங்க: கமல், விஜய், சூர்யா, சிம்பு குடும்பத்தை பற்றி மீரா மிதுன் கண்டுபிடித்த ரகசியம்... கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!!

இ-பாஸ் இல்லாமல் எப்படி கொடைக்கானலுக்குள் நுழைந்தார்கள் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர்களுக்கு கார் கொடுத்து ஊர் சுற்ற உதவிய காதர் பாட்சா என்பவர் கண்டறியப்பட்டுள்ளார். இதையடுத்து காதர் பாட்சா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் ஊர் சுற்றிய கார் மற்றும் ஜீப்பையும் பறிமுதல் செய்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios