இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் சிக்கித் தவித்த 350 தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலமான கர்நாடகாவிற்கு அனுப்பிவைக்க பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் இந்தியாவில் வரும் 17ம் தேதி வரை மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட போதே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊரை நோக்கி நடைபயணமாக புறப்பட்டனர். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடப்பது என்று தீர்மானித்து ஏராளமான தொழிலாளர்கள் நடக்க ஆரம்பித்தனர். சாலைகளிலும், தண்டவாளத்திலும் நடந்து சென்ற பலரும் விபத்துக்களில் சிக்கினர்.

கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலம், ஹவுரங்கபாத் அருகே சரக்கு ரயில் மோதியதில் தண்டவாளத்தில் ஓய்வெடுத்த 16 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் வடமாநில தொழிலாளர்கள் சாலை மற்றும் தண்டவாளத்தில் நடந்து செல்ல அனுமதிக்க கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்தியுள்ளது.

இதையும் படிங்க: கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிய சுனைனா... சட்டையை கழட்டி விட்டு அட்டகாசம் செய்யும் ஹாட் கிளிக்ஸ்...!
இந்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக பாலிவுட் நடிகர் சோனு சூட் பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். சந்திரமுகி, அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இந்தி நடிகர் சோனு சூட், தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருகிறார். சினிமாவில் வில்லனாக இருந்தாலும் கொரோனா காலத்தில் இவர் செய்யும் செயல்கள் அனைத்தும் ஹீரோ லெவலுக்கு உயர்த்திவிட்டது.

இதையும் படிங்க: வாயால் கெட்ட விஜய் சேதுபதி... வாண்டடாக சர்ச்சை வண்டியில் ஏறிய லட்சுமி ராமகிருஷ்ணன்...!
நமக்காக தங்களது உயிரை பணயம் வைத்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காக மும்பையில் உள்ள தனது 6 மாடி ஓட்டல் ஒன்றை இலவசமாக கொடுத்திருந்தார். அதேபோல் ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் 45 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்க சோனு சூட் ஏற்பாடு செய்துள்ளார். அந்தேரி, ஜோகேஸ்வரி, ஜூஹு, பாந்த்ரா ஆகிய பகுதிகளில் வசிக்கும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவளித்து வந்தார்.
இதையும் படிங்க: கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...!
இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் சிக்கித் தவித்த 350 தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலமான கர்நாடகாவிற்கு அனுப்பிவைக்க பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இரண்டு மாநில அரசிடமும் முறையான அனுமதி பெற்று 10 பேருந்துகளில் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். பணமிருக்கும் அனைவருக்கும் பிறக்கு கொடுக்க வேண்டும் என்ற மனம் இருப்பதில்லை. இப்படி பெரிய மனதுடன் உதவிகளை வாரி வழக்கும் சோனு சூட்டிற்கு பாராட்டுக்கள் குவித்து வருகிறது.



