வாயால் கெட்ட விஜய் சேதுபதி... வாண்டடாக சர்ச்சை வண்டியில் ஏறிய லட்சுமி ராமகிருஷ்ணன்...!
இதற்கு முன்னதாக தஞ்சை பெரிய கோவில் விவகாரத்தில் ஜோதிகாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்ணன், விஜய் சேதுபதிக்கு ஆதரவாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்து கடவுள்களை விஜய் சேதுபதி அவமதித்ததாக வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி 2019ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் நடத்திய 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியில் இந்துக்கள் வழிபடும் கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது பற்றி பேசியுள்ளார். ’’கோவில்களில் சாமி சிலைகளை அபிஷேகம் செய்யும் போது பக்தர்கள் அனைவரும் பார்க்கலாம். அபிஷேகம் செய்து முடிந்த பின் திரை மூலம் சாமி சிலை மூடப்படும். சிலை மூடப்படும் போது அந்த கோவிலில் இருந்த ஒரு சிறுமி அவள் என் தாத்தாவிடம் ‘எதற்காக சாமிகளை குளிக்கும்போது காட்டுகிறார்கள்.
இதையும் படிங்க: “கடவுள் உடை மாற்றுவதை காட்டுங்க”... சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சைபர் கிரைமில் புகார்...!
துணி மாற்றும்போது மூடப்படுகிறது?’’ என்று சந்தேக கேள்வி கேட்பதாகவும், அதற்கு தாத்தா ’’சாமி குளிக்கும்போது காட்ட்டுவார்கள். உடை மாற்றும்போது மூடப்படும்’’என்று கூறுகிறார். அதற்கு அந்த சிறுமி , ‘’இந்து கடவுள் குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே’’ என பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது அவருடைய ஒரிஜினல் கருத்து கிடையாது. மறைந்த கதாசிரியரும், நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகன் நிகழ்ச்சியில் பேசிய கைச்சுவை துணுக்கை இந்த நிகழ்ச்சியில் மறுபதிவு செய்தார்.
இதையும் படிங்க: “கமலும், சோவும் சிரிச்சப்ப எங்க போனீங்க... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக வைரலாகும் வீடியோ...!
ஆனால் விஜய் சேதுபதி இந்து மக்களின் மனம் புண்படும் படி நடந்து கொண்டதாகவும், இந்து மதத்தையும், இந்து கோயில்களின் ஆகம விதிமுறைகளையும் கொச்சைப்படுத்தியதாக கூறி இந்து மகா சபை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள அவரது ரசிகர்கள் #WeSupportVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய் சேதுபதியின் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசுவதாக கூறி சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் விஜய் சேதுபதி ரசிகர்கள் மன்றம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...!
மக்கள் செல்வனின் இந்த பேச்சுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு முன்னதாக தஞ்சை பெரிய கோவில் விவகாரத்தில் ஜோதிகாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்ணன், விஜய் சேதுபதிக்கு ஆதரவாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் கோயில் மற்றும் சடங்குகளை புனிதமானது என்று கருதுபவர்கள் நிச்சயமாக வருத்தப்பட்டிருப்பார்கள். எந்த மதத்துக்குரிய மத பழக்கவழக்கங்களையும் கேலி செய்வதற்கு யாருக்கும் தைரியம் இருக்காது. நான் ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால், நீங்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னாள் எந்த அர்த்தத்தில் எப்போது அவர் அப்படி பேசினார் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த ட்விட்டர் பதிவை விஜய் சேதுபதி ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.