'சந்திரமுகி 2 ' திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் நடிகர் - நடிகை தேர்வு நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில் நடிகை ஜோதிகா இதுவரை சந்திரமுகி 2 படம் குறித்து படக்குழுவினர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறியுள்ள நிலையில், இந்த படத்தில் அவருக்கு பதில் நடிகை சிம்ரன் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும் செய்திகள்: KGF பட ஹீரோ யஷ் - ராதிகாவின் செல்ல குழந்தைகளின் கியூட் அட்டகாசங்கள்! புகைப்பட தொகுப்பு!
 

கடந்த ஒரு மாதமாக இந்த தகவல், சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில், நடிகை சிம்ரன் இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாததால், சிம்ரனின் ரசிகர்கள் பலர் இவர் தான் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என நினைத்தனர். இந்நிலையில் ரசிகர்கள் ஆசையில் மண்ணை போடும் விதத்தில், இப்படி பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என கூறியுள்ளார். எனவே சிம்ரனின் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மலையாளத்தில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் மணிசித்ரத்தாலு. மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான ஃபாசில் இயக்கத்தில் மோகன் லால், ஷோபானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்தார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் சக்கப்போடு போட்ட அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் பி.வாசு.

மேலும் செய்திகள்:அரை நிர்வாண போட்டோ வெளியிட்ட கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹாசின்! அத்து மீறும் கவர்ச்சி அட்டகாச கிளிக்ஸ்!
 

அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ம் ஆண்டு 'சந்திரமுகி' திரைப்படம் வெளியானது. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சூப்பர் ஸ்டாரின் அசத்தலான ஸ்டைல், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு இரண்டும் சேர்ந்து படத்தை கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஓட வைத்தது. 

இந்த மிகப்பெரிய வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்து விட்டார் பி. வாசு. இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்கிற தகவல் ஏற்கனவே உறுதியாகியுள்ள நிலையில் மற்ற தகவல்களும் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளது. 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா கூட, சந்திரமுகி 2 படம் குறித்து தன்னிடம் படக்குழுவினர் யாரும் பேசவில்லை என தெரிவித்தார். இதனால் ஜோதிகா இரண்டாவது பாகத்தில் நடிப்பாரா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

எனவே நடிகை ஜோதிகாவுக்கு பதில், சிம்ரனிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கோலிவுட் திரையுலகில் சில பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. ஏற்கனவே சந்திரமுகி முதல் பாகத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரன் தான். இவரை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. திடீர் என, இவர் கர்ப்பமானதால்... இந்த படத்தை விட்டு விலகினார். இதன் பின்னரே இந்த படத்தில் ஜோதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: 77 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் இளையராஜா! இசை பயணத்தில் மறக்க முடியாத அரிய புகைப்பட தொகுப்பு!
 

ஒருவேளை முதல் பாகத்தில் விட்ட வாய்ப்பை இரண்டாம் பாகத்தில் பிடிக்க மும்முரம் காட்டுகிறாரா என்கிற சந்தேகமும் வலுத்தது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள நடிகை சிம்ரன், இது முற்றிலும் வதந்தி என்றும், இந்த தகவலால் தன்னுடைய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

நடிகை சிம்ரனின் விளக்கம் இதோ...