Asianet News Tamil

அவசரப்பட்டு விட்டாய்... போய் வா சகோதரா... சிம்புவை நிலைகுலைய வைத்த மரணம்! கதறல் அறிக்கை!

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையிலும், எதிர்பாராத விதமாக சில மரணங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி நிகழும் ஒவ்வொரு மரணங்களும் அவர்களது குடும்பத்திற்கு பேரிழப்பாக உள்ளது. நெருக்கமானவர்கள் இதயங்களை நொறுக்கும் விதத்தில் உள்ளது. காமெடி நடிகர் மாறன், இயக்குனர் தாமிரா, நடிகர் பாண்டு என்று உயிரிழப்புகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
 

actor simbu tearful statement for her fan
Author
Chennai, First Published May 16, 2021, 10:49 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையிலும், எதிர்பாராத விதமாக சில மரணங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி நிகழும் ஒவ்வொரு மரணங்களும் அவர்களது குடும்பத்திற்கு பேரிழப்பாக உள்ளது. நெருக்கமானவர்கள் இதயங்களை நொறுக்கும் விதத்தில் உள்ளது. காமெடி நடிகர் மாறன், இயக்குனர் தாமிரா, நடிகர் பாண்டு என்று உயிரிழப்புகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

மேலும் செய்திகள்: முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் - ஜெயம் ரவி! எவ்வளவு தெரியுமா?
 

தற்போது நடிகர் சிம்புவை அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்த குட்லக் சதீஷ் என்பவரது மரணம், கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்... "அன்பு தம்பியும் 'காதல் அழிவதில்லை' படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரருமான குட்லக் சதீஷை காலத்தில் இழந்திருக்கின்றேன்.

கொரோனா என்றவுடன் மருத்துவ உதவிக்கு எல்லாம் பேசி நம்பிக்கையோடு மீண்டு வருவார் என்று ஆறுதல் சொல்லி மருத்துவமனைக்கு அனுப்பினேன். அங்கு எடுத்துப் போகும் உடல்களை பார்த்து பயந்தது ஏன் சகோதரா? பயந்து உன் இதயத் துடிப்பை நிறுத்திக் கொண்டது ஏன் சகோதரா?

எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைக்காமல் போனது ஏன் சகோதரரா? துயர் கொள்கிறேன். உன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கின்றேன். உன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் தவிக்கின்றேன். நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி

மேலும் செய்திகள்: ஜொலிஜொலிக்கும் மாடர்ன் உடையில்... கலக்கல் போட்டோ ஷூட்..! ஹார்ட் பீட்டை எகிற வைத்த 'ரித்திகா'..!
 

அவசரப்பட்டு விட்டாய், போய் வா சகோதரா, அழுகையுடன் வழி அனுப்பி வைக்கிறேன்.

ரசிகர்களே, நண்பர்களே, சகோதர சகோதரிகளே, நோய்வாய்ப்பட்டால் தயவுசெய்து நிலை குலையாதீர்கள். பயம் நம்மை வீழ்த்துகிறது. பயம் தான் நாம் நோயிலிருந்து குணமாக தடுக்கிறது. சாதாரண நோயைத் தீவிரமாக்குவதும் பயம்தான்

நிலைகுலைதல் இதயத்தை தாக்குகிறது. தயவுசெய்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவம் செய்து கொள்வோம்

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள், அதேசமயம் மன திடத்தையும் பெருக்கிக் கொள்வோம். தேவையான மருந்துகள் எடுத்து கொள்வ்தோடு அல்லாமல் தேவையற்று வெளியே செல்வதை தவிர்க்கவும்.

மேலும் செய்திகள்: காதலனுடன் படு நெருக்கமாக ஸ்ருதிஹாசன் ... கொஞ்சிக் குலாவி மனதை புகையவிட்ட செம்ம ஹாட் போட்டோஸ்..!
 

இழப்புகள் தாங்க முடியாததாக இருக்கிறது, பாதுகாப்பாக இருப்பதே கொரோனாவை விரட்டும் மருந்து என புரிந்து கொள்வோம். சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல் இன்னொருமுறை இழக்க விரும்பவில்லை

இவ்வாறு சிம்பு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios