காதலனுடன் படு நெருக்கமாக ஸ்ருதிஹாசன் ... கொஞ்சிக் குலாவி மனதை புகையவிட்ட செம்ம ஹாட் போட்டோஸ்..!
நடிகை ஸ்ருதிஹாசன் புதிய காதலருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நெட்டிசன்கள் மனதை புகைய வைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், ஸ்ருதி ஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு பிரிந்தனர். அப்போது வேறு வேறு நாட்டில் இருப்பதால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார்.
தற்போது ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதியும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசனை இறுக்கி அணைத்தபடி இருக்கும் போட்டோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார் சாந்தனு. இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து இவர் தான் ஸ்ருதியின் புதிய காதலர் என்பது தெரியவந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் சாந்தனு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மும்பையில் ஒன்றாக கைகோர்ந்த படி நடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது
சமீபத்தில் கூட தன்னுடைய 35 ஆவது பிறந்தநாளை ஸ்ருதி ஹாசன் காதலனுடன் தான் கொண்டாடி மகிழ்ந்தார். இது குறித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.
தற்போது லாக் டவுன் நேரத்தை மும்பையில் கழித்து வரும் ஸ்ருதி ஹாசன், காதலர் சாந்தனுவுடன் கொஞ்சிக்குலாவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில, நெட்டிசன்கள் மனதை புகைய வைத்துள்ளது.