வடிவேலு மாதிரியே சிம்புவை ஒரு மூனு வருஷம்  படங்கள் இல்லாம காயப்போட்டாத்தான் சினிமாவோட அருமை அவருக்குத் தெரியும் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு சிம்புவுக்கு சொல்லப்பட்டபோது வழக்கமாக ஆணவமாக பதில் அளிக்கும் அவர் இம்முறை எடுத்த முடிவுதான் சென்னையில் இருந்து எஸ்கேப் ஆனது.

சுமார் இரண்டு மாதகாலத்துக்கும் மேலாக தாய்லாந்து உள்ளிட்ட சில சொகுசு நாடுகளில் தலைமறைவாக சுற்றித் திரிந்த நடிகர் சிம்பு நேற்று முற்றிலும் வேற ஒரு கெட் அப்பில் சென்னை திரும்பினார். கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு என்பது போல் முற்றிலும் கருப்பு காஸ்ட்யூம்களோடு ஏர்போர்ட்டில் இருந்து வெளியேறிய புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

’வந்தா ராஜாவாத்தான் வருவேன்’படத்தில் நடித்த செண்டிமெண்டோ என்னவோ அடுத்து தமிழ் சினிமாவுக்குள் எதுவாகவுமே வரமுடியாமல் தவிக்கிறார் சிம்பு. ‘மாநாடு’படத்திலிருந்து அவர் தூக்கி அடிக்கப்பட்ட பிறகு அவரால் பாதிக்கப்பட்ட அத்தனை தயாரிப்பாளர்களும் ஒன்று சேர ஆடித்தான் போனார் சிம்பு. வடிவேலு மாதிரியே சிம்புவை ஒரு மூனு வருஷம் படங்கள் இல்லாம காயப்போட்டாத்தான் சினிமாவோட அருமை அவருக்குத் தெரியும் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு சிம்புவுக்கு சொல்லப்பட்டபோது வழக்கமாக ஆணவமாக பதில் அளிக்கும் அவர் இம்முறை எடுத்த முடிவுதான் சென்னையில் இருந்து எஸ்கேப் ஆனது.

அவர் மறுபடியும் சென்னை திரும்பியிருக்கும் நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் நாளை ஞாயிறன்று ஒன்று கூடி, ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான பதில் சொல்லி, கால்ஷீட் தராத பட்சத்தில் அவருக்கு ரெட் விதித்து புதிய படங்கள் எதிலும் நடிக்கவிடாமல் தடுக்கவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்களாம்.