நடிகர் சிம்பு அவருடைய தங்கையின் செல்ல மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான 'வந்தா ராஜாவைத்தான் வருவேன்' திரைபடம் தோல்வியை தழுவியது. ஆனால் மல்டி ஸ்டார் படங்களாக இவர் நடிப்பில் வெளியான 'செக்க செய்வந்த வானம்' வசூலில் சக்க போடு போட்டது.

இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை ஹன்சிகா நடித்து வரும் 'மஹா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து நடிக்கிறார்.

தற்போது ஷூட்டிங் இல்லை என்பதால்... தன்னுடைய தங்கையின் குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது. 

View this post on Instagram

💛

A post shared by STR (@str.offcial) on May 30, 2019 at 6:35am PDT