இந்தியாவுல இருக்கோம்... எந்த பெயர் யார் வச்சாங்கன்றது தேவையில்லாத ஆணி - நடிகர் சித்தார்த் கோபம்
இந்தியாவை பாரத் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவது குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் சித்தார்த் மறுத்துள்ளார்.
உலக தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த இந்த ஆண்டு உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அதையொட்டி தற்கொலை செய்துகொள்வதை தடுப்பது தொடர்பாகவும், அதை எப்படி தவிர்ப்பது என்பது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளி வளாகத்தில் வாக்கத்தான் ஓட்டம் நடைபெற்றது. சினேகா தற்கொலை தடுப்பு மையம் சார்பில் தற்கொலை ஒரு தீர்வல்ல என்கிற பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மூன்று கிலோமீட்டர் தூரம் இந்த வாக்கத்தான் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... அடுத்த ஆதி குணசேகரனா நடிக்க கேட்டது நிஜம் தான்... ஆனா! எதிர்நீச்சல் டீமுக்கு வேல ராமமூர்த்தி கொடுத்த டுவிஸ்ட்
இதில் நடிகர் சித்தார்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வாக்கத்தான் விழிப்புணர்வு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பயணத்தில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகர் சித்தார்த்திடம் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட உள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சித்தார்த், நம்ம எல்லாருமே இந்தியால, சென்னையில கூடியிருக்கோம். இப்போ நடக்குற வாக்கத்தான் பற்றி பேசுவோம். இங்க வந்து எந்த பெயர், யார் வச்சாங்கங்கிறதெல்லாம் தேவையில்லாத ஆணி. எதுக்காக வந்திருக்கோமோ அதுபத்தி மட்டும் பேசுவோம் என செய்தியாளர்களிடம் காட்டமாக பதிலளித்தார்.
இதையும் படியுங்கள்... அருண் விஜய் அக்காவா இது! 50 வயதானாலும் அழகில் மகளுக்கே டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமார் - வைரலாகும் போட்டோஸ்