அருண் விஜய் அக்காவா இது! 50 வயதானாலும் அழகில் மகளுக்கே டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமார் - வைரலாகும் போட்டோஸ்
விஜயகுமாரின் மகள் அனிதா அவரது மகள் தியா உடன் உறவினரின் திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Diya
நடிகர் விஜயகுமாருக்கு மொத்தம் 5 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இதில் விஜயகுமாரின் மகள்களான கவிதா, அனிதா, வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா ஆகிய ஐந்து பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் வனிதா மட்டும் மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்றதோடு தன் தந்தையுடன் ஏற்பட்ட சண்டையால் குடும்பத்தை விட்டே பிரிந்து சென்றுவிட்டார். மற்ற 4 மகள்களும் திருமணமாகி குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டனர்.
Diya with her Brother
விஜயகுமாரின் மூத்த மகள் கவிதா, குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதேபோல் அவரது இரண்டாவது மகள் அனிதா, தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆனார். தற்போது சென்னையில் புதிதாக வீடு கட்டி கிரஹப்பிரவேசம் நடத்தியுள்ள அவர் அண்மையில் தனது 50-வது பிறந்தநாளையும் தடபுடலாக கொண்டாடினார். இதில் அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலக தோழிகள் கலந்துகொண்டனர்.
Anitha Vijayakumar family
விரைவில் அனிதாவின் மகள் தியாவுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது உறவினர் ஒருவரின் திருமண கொண்டாட்டத்தில் அனிதா விஜயகுமார் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... இது வீடா இல்ல அரண்மனையா! தியேட்டர் வசதியுடன் விஜயகுமார் மகள் கட்டிய சொகுசு பங்களாவின் ஹோம் டூர் வீடியோ இதோ
Diya with her mom Anitha Vijayakumar
அதில் சிகப்பு நிற லெஹங்கா அணிந்து ஹீரோயின் போல் போஸ் கொடுத்துள்ள தியா, ஒரு புகைப்படத்தில் தன் அம்மா அனிதாவோடு போஸ் கொடுத்துள்ளார். அதைப்பார்க்கும் போது இருவரும் அக்கா, தங்கை போல் உள்ளனர். 50 வயதானாலும் அனிதா விஜயகுமார் அந்த அளவுக்கு இளமையாக தெரிகிறார்.
Preetha hari, Diya
இதுதவிர தன்னுடைய சகோதரனுடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ள தியா, இறுதியாக இயக்குனர் ஹரியின் மனைவியும், தனது சித்தியுமான பிரீத்தா ஹரி உடன் எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... இதென்ன பிக்பாஸ் வீடு மாதிரில இருக்கு... மகள் வீட்டு விசேஷத்திற்கு வாரிசுகளுடன் படையெடுத்து வந்த விஜயகுமார்