Shanthnu and Kiki Vijay : பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பாக்கியராஜின் மகன் தான் சாந்தனு பாக்கியராஜ். இவர் பிரபல தொகுப்பாளினி கிக்கி விஜய் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பிரபல நடிகர் சாந்தனு பாக்யராஜ் சிறுவயது முதலேயே நடித்து வருகிறார், அவர் தொடர்ச்சியாக மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தும் பொழுதும் இவருக்கு என்று ஒரு சரியான பிரேக் கொடுக்கும் திரைப்படம் இதுவரை அமையவில்லை என்றே கூறலாம். இந்த சூழலில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல தொகுப்பாளினி கிக்கி விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சாந்தனு.
கிக்கி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் கீர்த்தி விஜய் பிரபல நடன இயக்குனர் ஜெயந்தி அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயந்தி மிகப்பெரிய நடன குடும்பத்தில் இருந்து பிறந்தவர். கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகிய இருவரும் தான் ஜெயந்தியின் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சாந்தனுவும் மிகப்பெரிய நடன இயக்குனர் என்பது பல அறிந்திடாத உண்மை, இந்த இளம் ஜோடிகள் இணைந்து தங்கள் சமூக வலைதளங்களில் ஜாலியான பல வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் நடிகர் சாந்தனு தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மனைவி கிக்கியை கலாய்த்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், சாந்தனு தான் பயன்படுத்தும் பொருட்களை ஆங்காங்கே அப்படியே விட்டுச்செல்ல, கிக்கி அதை உடனே சரிசெய்துவிடுகிறார். ஜாலியான இந்த வீடியோவில் "என் மனைவிக்கு OCD பிரச்சனை இல்லை", நாங்கள் ஒரு முரண்பாடான ஜோடி அவ்வளவு தான், உங்களில் எத்தனை பேர் இப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
