Breaking: நடிகர் சத்யராஜின் குடும்பத்தில் ஏற்பட்ட மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!

பிரபல நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் சுப்பய்யா, வயது மூப்பு காரணமாக காலமானார்.
 

Actor sathyarj Mother passed away at the age of 94

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக வெற்றி கண்டவர் சத்யராஜ். ஹீரோவாக நடித்தாலும், தன்னுடைய குசும்பத்தனமான காமெடியால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சிரிக்க வைப்பது இவரின் மிகப்பெரிய பலம் என கூறலாம். எப்படி பட்ட கதாபாத்திரம்  கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பார். அந்த வகையில் இவர் நடித்த வேதம் புதிது கதாபாத்திரத்தில் நடித்த, பாலு தேவர், நாகராஜா சோழன் படத்தில் நடித்த அமாவாசை, பாகுபலி கட்டப்பா போன்ற கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாதவை.

அதிலும் குறிப்பாக... பாகுபலி படத்திற்கு பின்னர் உலக அளவில் இவரது நடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தன்னுடைய ஓவ்வொரு படத்திலும் முடிந்தவரை வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து இவரின் மகனும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். 

Actor sathyarj Mother passed away at the age of 94

இந்நிலையில் நடிகர் சத்யராஜின் தாயார்  நாதாம்பாள் வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் கடந்த சில வருடங்களாகவே அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் வயது 94. 

 

இவர் கோவையில் வசித்து வந்த நிலையில் அங்கு தான் உயிரிழந்துள்ளார். இவருக்கு சத்யராஜ் ஒரே மகனாவார். மேலும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். தற்போது சத்யராஜ் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருக்கும் நிலையில், தாயாரின் மறைவு குறித்து அறிந்து கோவைக்கு விரைத்துள்ளார். அவன் இறுதி சடங்குகள் அனைத்தும் சொந்த ஊரான, கோவையில் தான் நடைபெறும் என கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios