பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், தன்னுடைய உண்மையான குணத்தால் ரசிகர்கள் மனதை வென்ற போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் பருத்தி வீரன் சித்தப்பு சரவணன். இந்நிலையில் இவருடைய மனைவி பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த போது, தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்கள் பற்றியும் பேசியுள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி பேசிய இவர், "பிக்பாஸ் வீட்டில் யார் மிகவும் நேர்மையான குணத்துடன் விளையாடி வருகிறார் என்று, எழுப்பப்பட்ட கேள்விக்கு தன்னுடைய கணவர் சரவணன் பெயரை கூறினார்.

இதை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் மிகவும் பாசமாக இருப்பது யார் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பாத்திமா பாபு பெயரை கூறினார்.

பிக்பாஸ் வீட்டில் அப்பட்டமாக நடிக்கிறார் என யாரை பார்த்தல் தெரிகிறது என்றால் யாருடைய பெயரை சொல்வீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, நடிகை வனிதாவின் பெயரை கூறினார்.

இரண்டு பக்கமும் கோல் போட்டு விளையாடுவது யார் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, நடன இயக்குனர் சாண்டியின் பெயரையும், ஒருவரை பற்றி மற்றொருவரிடம் குறை கூறி கொண்டு, ஆல் இந்தியா ரேடியோ போல் இருப்பவர் நடிகை அபிராமி என கூறியுள்ளார்.

ஓரளவுக்கு இவருடைய கருத்து கணிப்பு சரியாக உள்ளதாக ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.