பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத்திற்கு  3ம் கட்ட நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலக உள்ளதாக சஞ்சய் தத் அறிவித்தார்.கொரோனா பிரச்சனை காரணமாக சஞ்சய் தத் வெளிநாட்டு சிகிச்சைக்கு செல்ல முடியாமல் போனது. 

 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது? மார்டன் உடையில் என்னம்மா போஸ் கொடுத்து அசத்தியிருக்காங்க...!

இதனால் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் கீ தெரபி சிகிச்சை எடுத்து வரும் 61 வயதான சஞ்சய் தத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. காரணம் அந்த படத்தில் சஞ்சய் தத் மிகவும் இளைத்து போய் களைப்பாக காணப்பட்டார். இந்நிலையில் தான் புற்றுநோயிலிருந்து நல்ல படியாக மீண்டு விட்டதாக சஞ்சய் தத் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. 

“கடந்த சில வாரங்கள் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிகக் கடினமானதாக இருந்தது. ஆனால், கடினமான போர்களை வலிமையான போர் வீரர்களுக்குத்தான் கடவுள் கொடுப்பார் என்று சொல்வதைப் போல ஏற்றுக்கொண்டோம். என் குழந்தையின் பிறந்த நாளான இன்று இந்தப் போராட்டத்திலிருந்து நான் வெற்றிகரமாக வந்திருப்பதில், எங்கள் குடும்பத்தின் நலன் மற்றும் ஆரோக்கியம் என்கிற சிறந்த பரிசைக் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி.

 

இதையும் படிங்க: “பீட்டர் பாலை அன்னைக்கே செருப்பால அடிச்சு விரட்டியிருப்பேன்”... கொந்தளித்த வனிதா...!

உங்களது அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவு இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. என்னுடன் நின்ற, இந்தக் கடினமான கட்டத்தில் எனக்குத் தெம்பாக இருந்த எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் அத்தனை ரசிகர்களுக்கும் நான் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன். அனைத்து அன்பு, கனிவு, கணக்கில் அடங்காத ஆசிர்வாதங்களுக்கு நன்றி. கோகிலாபென் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் செவாந்தி, அவரது மருத்துவர் குழு, செவிலியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு குறிப்பாக என் நன்றி. கடந்த சில வாரங்களாக என்னை அவ்வளவு நன்றாகப் பார்த்துக் கொண்டனர்” என பதிவிட்டுள்ளார்.