Asianet News TamilAsianet News Tamil

“பீட்டர் பாலை அன்னைக்கே செருப்பால அடிச்சு விரட்டியிருப்பேன்”... கொந்தளித்த வனிதா...!

எனக்கு பீட்டர் பால் முறையாக விவாகரத்து வாங்காத விஷயம் தெரியாது. அந்த விவகாரத்திலும் நான் தலையிடவில்லை. பீட்டர் பாலின் சட்டப்படி மனைவி என சொல்லிக்கொள்பவர் புகார் கொடுத்து மீடியாவில் பேட்டி கொடுத்ததால் தான் பிரச்சனை வெளியே வந்தது. 

Vanitha Vijaykumar Explain Why I accept Peter paul to marriage
Author
Chennai, First Published Oct 21, 2020, 12:33 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பல சர்ச்சைகள், பிரச்சனைகளுக்குப் பிறகு  வாழ ஆரம்பித்த வனிதாவும், பீட்டர் பாலும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. கோவாவில் வனிதாவிடம் பீட்டர் பால் குடித்துவிட்டு தகராறு செய்ததாகவும், இதனால் பீட்டர் பாலை வனிதா அடித்து விரட்டிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே நேற்று வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பீட்டர் பாலை பிரிந்துவிட்டதை உருக்கமாக அறிவித்தார். 

Vanitha Vijaykumar Explain Why I accept Peter paul to marriage


இந்நிலையில் பீட்டர் பாலை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டது முதல் தற்போது தோற்றுபோய் பிரிந்து சென்றது வரை என்ன நடந்து என வனிதா தனது யூ-டியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பீட்டர் பாலை அவருடைய வீட்டில் பல முறை சந்தித்துள்ளேன். அவர் பேச்சிலர் போல் தான் வாழ்ந்து வந்தார். அவர் வேலை செய்யும் இடத்திற்கும் சென்று பார்த்துள்ளேன். அப்போது அவர் தனியாக தான் இருக்கிறார் என்பதை நம்பினேன். அவர் என்னை கல்யாணம் செய்து கொள்ள கேட்ட போது, நான் ஒன்றும் சின்ன பெண் இல்லை. எனக்கும் 39 வயதாகிறது. ஒரு துணை தேவை என்பதால் தான் அவரை ஏற்றுக்கொண்டேன். அவர் ஏன் ஏற்கனவே திருமணமானதை முன்பே கூறவில்லை என எனக்கு தெரியாது. ஆண்கள் வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் என நினைத்தாரா? மறைக்க வேண்டுமென நினைத்தரா? அவர் என்ன நினைத்தாரா என்பது எனக்கு தெரியாது. நான் அன்பை நம்பி ஏமாந்தேன். 

Vanitha Vijaykumar Explain Why I accept Peter paul to marriage

ஒருவேளை பலரும் சொல்வது போல் நான் பீட்டர் பாலுடன் திருமணம் செய்யாமல் வாழ வேண்டும் என நினைத்திருந்தால் அதை சாதாரணமாக செய்திருக்க முடியும். அப்புறம் எதுக்கு பத்திரிக்கை அடித்து, எல்லாருக்கும் சொல்லி திருமணமாக நடத்த ஆசைப்பட்டிருக்க மாட்டேன். எல்லாரும் என்னை மோசமான வாழ்க்கையில் விமர்சித்தது போல் வாழ நினைத்திருந்தால் எத்தனையோ கோடீஸ்வரன்களுடன் நான் இருந்திருப்பேன். ஒருந்தர் இல்லை நிறைய பேரை என்னால் மெயின்டன் பண்ணியிருக்க முடியும். விபச்சாரம் செய்யும் பெண்களை கூட நான் தப்பாக சொல்லமாட்டேன். அது அவர்களுடைய சூழ்நிலை என்று தான் சொல்வேன். இதை எதையுமே நான் செய்யவில்லை. ரொம்ப நல்ல பொண்ணா... திரும்ப ஒரு கல்யாணம் பண்ணிட்டு, அழகா குடும்பம் நடத்திட்டு... புருஷனுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டேன். அது தான் எனக்கு இந்த கெட்டப்பெயரை வாங்கி கொடுத்தது. 

Vanitha Vijaykumar Explain Why I accept Peter paul to marriage

எனக்கு பீட்டர் பால் முறையாக விவாகரத்து வாங்காத விஷயம் தெரியாது. அந்த விவகாரத்திலும் நான் தலையிடவில்லை. பீட்டர் பாலின் சட்டப்படி மனைவி என சொல்லிக்கொள்பவர் புகார் கொடுத்து மீடியாவில் பேட்டி கொடுத்ததால் தான் பிரச்சனை வெளியே வந்தது. பீட்டர் பால் முதல் மனைவியுடன் பண விவகாரம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். நான் எலிசபெத் ஹெலனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன்.

Vanitha Vijaykumar Explain Why I accept Peter paul to marriage

 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது? மார்டன் உடையில் என்னம்மா போஸ் கொடுத்து அசத்தியிருக்காங்க...!

ஆனால் அவங்க என்னிடம் பேசவில்லை. வேண்டுமென்று தான் அதை பெரிதாக்கினார். அன்னைக்கு ஹெலன் என்னிடம் பேசியிருந்தால் அன்னைக்கே அவரை செருப்பால அடிச்சி அனுப்பியிருப்பேனே. கடைசில் நான் என்னமோ 100 வருஷம் புருஷன், பொண்டாட்டியா வாழ்ந்தவங்க வாழ்க்கையை கெடுத்த மாதிரியும் எல்லாம் நடந்துவிட்டது. நான் தான் அவங்க புருஷனை கூப்பிட்டு வந்துட்டனாம், பிள்ளைகள் எல்லாம் சோறு தண்ணி இல்லாமல் கிடக்குதாம் என இந்த சூழ்நிலையும் எலிசபெத் ஹெலனுக்கு குட்டு வைக்காமல் பேசியிருக்கிறார் வனிதா. 

Follow Us:
Download App:
  • android
  • ios