நடிகர் ராணா அவர் காதலித்து வந்த பெண் ஒருவரிடம், காதலை கூற, அந்த பெண் அதனை ஏற்றுக்கொண்டுவிட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய காதலியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் ராணா வெளியிட்டுள்ளார். 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் ராணா. கடந்த 2010 ஆம் ஆண்டு, லீடர் என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம் பேர் விருது இவருக்கு கிடைத்தது. 

இந்த படத்தை தொடர்ந்து, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் இவர் தமிழில், தல அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தில் மிலிட்டரி ஆபீஸராகவும், அஜித்தின் நண்பராகவும் நடித்திருந்தார். பின் இவர் இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், வெளியான பாகுபலி படத்தில், பல்லாலதேவனாக நடித்து மிரட்டிய காட்சிகளை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.

மேலும் செய்திகள்: பொக்கிஷம் போன்றது... இதுவரை யாரும் பார்த்திட முடியாத அரிய புகைப்படத்தை பகிர்ந்த நடிகை குஷ்பு!
 

காட்டெருமையுடன் மோதும் காட்சியிலும் சரி, சூழ்ச்சி செய்யும் காட்சியிலும் சரி, தன்னுடைய மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்திற்காக பல்வேறு உடல்பயிற்சி செய்து தன்னுடைய எடையை ராணா அதிகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் என்பதையும் தாண்டி, பட தயாரிப்பாளர், விஷ்வல் எபெக்ட்  சூப்பர்வைசர், தொகுப்பாளர், விநியோகஸ்தர் என திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: புற்றுநோயுடன் போராடி வந்த பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!
 

35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர், பிரபல நடிகைகளின் காதல் சர்ச்சையில் சிக்கி மீண்டவர். இந்நிலையில் இவர், பேஷன் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வரும் தொழிலதிபரும், மாடலுமான, மிகிக்கா பஜாஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். 

இதனை மிக்கீக்காவிடம் ராணா கூற அந்த பெண்ணும் ராணாவின் காதலை ஏற்று கொண்டுள்ளார். இதனை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக, மிக்கீக்காவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, அந்த பெண் தன்னுடைய காதலை ஏற்று கொண்டதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ராணாவின் ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: நயன்தாரா குழந்தையில் கூட இவ்வளவு அழகா! யாரும் இதுவரை பார்த்திடாத புகைப்படத்தை வெளியிட்டு அம்மாவுக்கு வாழ்த்து!
 

எனவே இவர்களின் திருமணம் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.