கடந்த ஒரு வருடமாக புற்றுநோயுடன் போராடி வந்த பிரபல நடிகரும் மிமிக்கிரி கலைஞருமான  கலாபவன் ஜெயேஷ், திடீர் என உயிரிழந்துள்ளது பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  
 
44 வயதாகும் நடிகர்  கலாபவன் ஜெயேஷ், ஏற்கனவே புற்று நோய்க்கான சிகிச்சை எடுத்து வரும் நிலையில், அவருக்கு திடீர் என கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10) அன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக கேரளாவில் உள்ள சாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மலையாள ரசிகர்கள் மத்தியில் நடிகராகவும், மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாகவும் பிரபலமான கலாபவன் ஜெயேஷ், Passenger மற்றும் Salt & Pepper உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: நிஜ ஹீரோ நீங்கள் தான்...! காவல் நிலையங்களுக்கு சென்று போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கிய காமெடி நடிகர் சூரி!
 

திரைப்படங்கள் தவிர, தொலைக்காட்சியில் பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை சின்னத்திரையிலும் நிரூபித்தவர். இவரின் மறைவு மலையாள திரையுலக ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள திரிசூரில் பிறந்த ஜெயேஷ்க்கு சுனாஜா என்கிற மனைவியும் சிவானி என்கிற மகளும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவரின் ஐந்து வயது மகன் சித்தார்த் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.