கொரோனா வைரஸ் பிரச்சனை துவங்கியதில் இருந்தே, பல்வேறு  வீடியோவை வெளியிட்டு, மக்களுக்கும், ரசிகர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர், கோலிவுட் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருந்து வரும் நடிகர் சூரி.

மேலும் இந்த கொரோனா ஊரடங்கு துவங்கப்பட்ட ஆரம்ப நாட்களில், தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து குறும்புத்தனமான வீடியோவை வெளியிட்டு, அதன் மூலம் பெற்றோர் எப்படி குழந்தைகளிடம் நடந்து கொள்ளவேண்டும் என்றும், அவர்களுக்கு அடிக்கடி குடும்பத்தில் உள்ள உறவினர்கள் பற்றி தெரிவிப்பது எவ்வளவு அவசியமானது என்பது பற்றியும் கூறினார். இவர் இப்படி வெளியிட்ட விடியோக்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இந்நிலையில் இரவு பகல் பாராமல், மக்களுக்காக வேலை செய்து வரும், காவலர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவிக்கும் விதமாகவும், அவர்களை பெருமை படுத்தவும், சூரி புது முயற்சி ஒன்றை செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: கவர்ச்சி காட்டுவதில் மட்டும் இல்லை... உதவி செய்வதிலும் பெரிய மனசு! 5 கோடி அள்ளிக்கொடுத்த பிரபல நடிகை!
 

அதன்படி சென்னையில் உள்ள D1 காவல் நிலையம், அண்ணா சாலை, Triplicane ஆகிய இடங்களில் அமைந்துள்ள காவல் நிலையங்களுக்கு சென்று, அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களிடம் ஆட்டோகிராப் பெற்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்... “கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேலையில்,கொரோனா வைரஸ் பரவலிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி 
மக்களை காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர். 

மேலும் செய்திகள்: மறக்க முடியாத அழகிய நினைவுகள்..! கணவர் - குழந்தையோடு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் சினேகா!
 

தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் நமது உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள். எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லை சாமி, அது போல் தற்போது காவல் துறையினர் நாம் எல்லோருக்கும் எல்லை சாமி போல் இருந்து நம்மைக் காத்து வருகின்றனர்.

கடவுளை அன்றாடம் வணங்கும் நாம் அனைவரும், சமீப காலங்களாக காவல் துறையினையறையும் வணங்க ஆரம்பித்து விட்டோம்.  ஆனால் இந்த கொரோனாவை காவல் துறை நண்பர்களையும் விட்டு வைக்கவில்லை. இது வரை 60 காவல் துறையினர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.

மேலும் செய்திகள்: வெள்ளாவி நடிகையின் காதலர் இவரா..? மூடி மறைத்த காதலரை ரசிகர்களுக்கு காட்டிய டாப்ஸி!
 

சினிமாவில் தான் நாங்கள் கதாநாயகர்கள், ஆனால் நிஜத்தில் காவல் துறையினர், மருத்துவர்கள், தீயனைப்பு வீரர்கள், செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள் ஆகிய நீங்கள் தான் உண்மையான கதாநாயகர்கள். எனவே நிஜ கதாநாயகர்களான இவர்களைச் சந்தித்து நன்றி கூறி, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த நாள் என் வாழ் நாளில் மிக முக்கியமான நாளாக நினைக்கிறேன். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு என்றென்றும் எனது மனதில் நிலைத்திருக்கும். நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம், நம்மை பாதுகாப்பவர்களுக்கு துணை நிற்போம்” என்று நடிகர் சூரி கூறினார்.