தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜ்கிரண். அந்த பெயரை சொல்லும் போதே நம் கண் முன்னே அவரது கம்பீர தோற்றம் வந்து போகும். மிகப்பெரிய போலீஸ் அதிகாரியாக பணியில் அமர வேண்டும் என்று கனவு கண்ட ராஜ்கிரணை, விதியும், குடும்ப சூழ்நிலையும் சேர்ந்து 16 வயதிலேயே வேலைக்கு துரத்தியது. ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்த ராஜ்கிரண், சினிமா விநியோக கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். 

பட விநியோகஸ்தராக வாழ்க்கையை ஆரம்பித்த ராஜ்கிரண், கஸ்தூரி ராஜா இயக்கத்தில் என் ராசாவின் மனசிலே படம் மூலம் நடிகராக அறிமுகமானார். மீனா, ஸ்ரீவித்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த அந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வரவேற்பை பெற்றது. விநியோகஸ்தர் ஏசியன் காதராக புகழ்பெற்ற ராஜ்கிரண் ஒரே படத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக மாறினார். 

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

அதன் பின்னர் நடித்த எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள  பாண்டியரே, பாண்டவர் பூமி, கோவில், காவலன், வேங்கை, பா.பாண்டி, ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களையும், கதைகளையும் மட்டுமே தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக கொண்டவர். அப்படி சரியான கதைகள் அமையாவிட்டால் படங்களில் நடிக்காமல் சும்மா கூட இருப்பாரோ தவிர, பணத்திற்காக வந்த கதைகளை எல்லாம் ஒப்புக்கொள்ளமாட்டார். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

அப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ராஜ் கிரணை முதலில் கேட்டுள்ளனர். அதற்கு முன்னதாகவே அவர் என்ன தொகை கேட்டாலும் சம்பளமாக கொடுப்பது, எவ்வித மரியாதை குறைவும் இல்லாமல் பார்த்துக்கொள்வது என்று படக்குழு முடிவு செய்துள்ளனர். ஆனால் ராஜ்கிரண் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

இதையும் படிங்க: நடிகர் இர்ஃபான் கானின் கடைசி ட்வீட்... கண்ணீர் விட்டு கதறித் துடிக்கும் ரசிகர்கள்...!

அதற்கு இரண்டு காரணங்களை கூறியுள்ளார், ஒன்று இது முழுக்க கெட்டவனாகவே நடிக்க வேண்டிய கதாபாத்திரம், ஆனால் நான் எனக்கு ஏதார்த்தமாக வரும் நடிப்பை வைத்து தான் படங்களில் நடித்து வருகிறேன். இரண்டாவது காரணம் எக்காரணம் கொண்டு வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறி வந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். அப்போது ராஜ்கிரண் ஓராண்டாக படமில்லாமல், பண கஷ்டத்தில் இருந்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது.