Indraja shankar : பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு சில தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது திருமண சடங்குகள் துவங்கியுள்ளது.

மேடை நாடகங்களில் நடித்து புகழ்பெற்று, அதன் பிறகு வெள்ளித்தறையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க துவங்கி, பிறகு மிகப் பெரிய காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக உயர்ந்தவர் தான் ரோபோ சங்கர். இடையில் பெரிய அளவில் உடல்நல கோளாறு ஏற்பட்டு தற்பொழுது மீண்டு வந்துள்ளார் அவர் என்றால் அது மிகையல்ல. 

இந்நிலையில் அவருடைய மகளும், பிரபல நடிகையுமான இந்திரஜா சங்கருக்கு அவருடைய உறவினர் கார்த்தி என்பவருடன் அண்மையியல் திருமண நிச்சயம் நடந்து முடிந்தது. இதனையடுத்து தற்பொழுது திருமண நிகழ்வுக்கான சடங்குகள் துவங்கியுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல நடிகர், நடிகைகள் நேரில் கலந்து கொண்டனர். 

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி பட நடிகை.. வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் - என்ன நடந்தது?

இந்த திருமண நிகழ்வுகளில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளை நடத்தி அசத்தியுள்ளார் ரோபோ சங்கர். மேலும் ரோபோ சங்கருக்கு புடவை கட்டி அழகு பார்த்தனர் விழாவில் கலந்துகொண்டவர்கள். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

View post on Instagram

தற்பொழுது அந்த செலிப்ரேஷன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர் ராஜ்கமல். மேலும் தனது தங்கை இந்திரஜாவிற்கு அனைவரும் திருமண வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குட் நைட் பட நடிகைக்கு ரகசியக் கல்யாணம்! ஜோடியாக போட்டோ வெளியீட்ட மீதா ரகுநாத்!