நடிகர் ராஜேஷ், திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் மனிதநேயம் நிரம்பிய கதாபாத்திரங்களால் பெரிதும் புகழடைந்தவர் நடிகர் ராஜேஷ். அப்பா, ஆசிரியர் மற்றும் மரியாதைக்குரிய மனிதராக தனது நடிப்பில் பரிணாமங்களை ஏற்படுத்திய அவர், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அழியாத இடம் பிடித்திருந்தார். இவரது மறைவு திரையுலகத்தையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நடிகர் ராஜேஷ் திரைப்படங்கள்

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த ராஜேஷ், திண்டுக்கல், வடமதுரை, மேலநத்தம், ஆனைக்காடு, தேனி மாவட்டம் சின்னமனூரில் கல்வி பயின்றார். "கன்னிப் பருவத்திலே" திரைப்படம் மூலம் திரையுலகில் பயணத்தைத் தொடங்கிய அவர், 47 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா வரலாற்றில் இடம்பிடித்து, "சர்க்கார்" வரை 150-க்கும் மேலும் திரைப்படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

ராஜேஷ் குடும்ப வாழ்க்கை

திரைப்படங்களுக்கு மட்டுமல்ல பல தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் முக்கியமான பங்காரித்தார். சமீப காலங்களில் உடல்நலத்துடன் கவனம் செலுத்திய இவர், மருத்துவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து வந்திருந்தார். அவரது மனைவி சில்வியா 2012 ஆம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு திவ்யா, தீபக் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்தில் கலந்து கொண்டது, மகன் தீபக்கின் திருமண ஏற்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராஜேஷுக்கு என்ன ஆனது?

தீபக்கின் திருமணம் ஜூன் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் துபாயில் இருந்து சென்னை திரும்பிய ராஜேஷுக்கு சளி ஏற்பட்டதாக தெரிகிறது. வழக்கம்போல் மருந்துகள் எடுத்தாலும், கடந்த அதிகாலை மூச்சுவீச்சில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக அவரது மகன் தீபக் ஆம்புலன்ஸை அழைத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

நடிகர் ராஜேஷ் மகள் திவ்யா

ஆனால், மாடியில் இருந்து கீழே இறங்கும்போது அவருடைய அளவு குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸில் ஏற்றியவுடன் அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. மருத்துவமனையில் அவரை கொண்டு சென்றபோது மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். திவ்யா இன்று காலை சென்னை வந்ததையடுத்து, நடிகர் ராஜேஷின் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்திற்கு செல்லப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.