Pugazh and Kureshi : சித்திரையில் பெரும் வரவேற்பு பெற்று இப்பொது வெள்ளித்திரையில் நல்ல நடிகராக மாறியுள்ளனர் தான் புகழ். அதே போல குரேஷி அவர்களுக்கும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உண்டு.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோர்களின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இரு நல்ல திறமைசாளிகள் தான் புகழ் மற்றும் குரேஷி. அதேபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் பெரிய அளவில் புகழ் கிடைத்தது. இந்த சூழ்நிலையில் சின்னத்திரை நடிகராக இருந்த புகழ் இப்பொழுது வெள்ளித் திரையிலும் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
ஜூ கீப்பர் என்ற திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல குரேஷியும் தற்பொழுது வெள்ளித்தறையில் மெல்ல மெல்ல கால் பதிக்க துவங்கியுள்ளார். இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் துபாயில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் இருந்து வெளியான வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரல் ஆனது.
அந்த வீடியோவில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்பொழுது போட்டியாளராக இருக்கும் மாயா ஆகிய இருவரையும் தொடர்புபடுத்தி சில ஜோக்குகளை அவர்கள் மேடையில் பேசினார். கடந்த சில தினங்களாக அந்த வீடியோ பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் இது உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் புகழ் மற்றும் குரேஷியே ஆகிய இருவரும் வீடியோ வெளியிட்டு உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடைய ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் உலகநாயகன் அவர்களை பற்றி நம் அனைவருக்கும் தெரியும், இது நகைச்சுவைக்காக செய்யப்பட்டது மட்டுமே அன்றி வேறு எதுவும் அல்ல என்று கூறி நடிகர் புகழ் அவர்களும் குரேஷி அவர்களும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய ரசிகர்களின் முன்னிலையில் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
