இந்திய-சீன எல்லையான லடாக் அருகில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்ட மோதலில், இந்தியாவை சேர்ந்த 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவிடம் போரிட்டு உயிர் துறந்த வீரர்களுக்கு, குடியரசு தலைவர், பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள், மற்றும் பிரபலங்கள் என அனைவரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்தனர்.

  மேலும் செய்திகள்:மூணு மாச உழைப்பு... நச்சுனு மாறிய அந்த இடத்தை காட்டி போட்டோ வெளியிட்ட நடிகை யாஷிகா!
 

சீனாவிலும், 35 திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  சீனாவின் அத்துமீறிய தாக்குததால், இந்திய மக்கள் அனைவருமே சீனா மீது கடும் கோபத்தை, சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள். 

இனிமேல் சீன பொருட்களை வாங்கக் கூடாது என ஒரு தரப்பினரும், சீன செயலியான டிக்டாக் போன்றவற்றை உபயோகிக்க கூடாது என மற்றொரு தரப்பினரும் கூறி வருகிறார்கள். மேலும் பல வணிகர் சங்கங்களும் சீனப் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  மேலும் செய்திகள்: பிக்பாஸ் வனிதாவின் 3 ஆவது திருமணம்...! கணவராக போகும் பீட்டர் பால் இவரா? புகைப்படம் இதோ
 

சீனாவின் முக்கிய வர்த்தக சந்தைகளில் ஒன்றாக இருக்கும் இந்தியா, சீனாவின் பொருட்களை முழுமையாக தவிர்த்தால் சீனா நெருக்கடிக்கு தள்ளப்படும். 

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய ராணுவ வீரர் பழனி மற்றும் 19 பேருக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குவதை தவிர்த்து சீன (வர்த்தக) பெருஞ்சுவரை உடைப்போம் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு பெரும்பாலான நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.