நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்ட பதிவுக்கு ரசிகர் ஒருவர் அவரிடம் நியாமான கேள்வியை எழுப்பியதற்கு, மிகவும் கூலாக அவரை பாராட்டி பதில் கொடுத்துள்ளார். 

நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்ட பதிவுக்கு ரசிகர் ஒருவர் அவரிடம் நியாமான கேள்வியை எழுப்பியதற்கு, மிகவும் கூலாக அவரை பாராட்டி பதில் கொடுத்துள்ளார்.

தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை படு தீவிரமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் பல்வேறு, நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 30 ,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருவதால், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில்... ஏற்கனவே கடந்த மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு எவ்வித தளர்வுகளும் இல்லாதா ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்: சந்தானத்தின் நெருங்கிய உறவினர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு! திட்டமிட்ட கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

அதே நேரத்தில், கொரோனா காலத்தில் வெளியே வர வேண்டாம் என்று, பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளம் மூலமாகவும், அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் பார்த்திபன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நாளை சிரிக்க-சிறக்க.... இன்று உள்ளிருப்போம் உறவே !" என்கிற பதிவை போட்டிருந்தார். இந்த பதிவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் செய்திகள்: நினைவை விட்டு நீங்காத 'பாண்டியன் ஸ்டோர்' சித்ரா...! பலரும் பார்த்திடாத ரேர் போட்டோஸ்..!

ஆனால் ரசிகர் ஒருவர் "உள்ளே இருந்தால் உணவு யார் தருவார்கள்?" என்கிற கேள்வியை எழுப்பி இருந்தார். இதற்க்கு பதில் கொடுத்துள்ள பார்த்திபன், சரியான செருப்படிக் கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கிவிடுகிறது பசி.இருந்தாலும் உள் இருந்தா ... உணவை உண்ண நாமிருப்போம் -நாளை! இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும். என நச் பதில் கொடுத்துள்ளார். 

Scroll to load tweet…
Scroll to load tweet…