கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. இந்த படத்தின் இயக்குநரும் பிரபல திரைக்கதை ஆசிரியருமான சச்சி நேற்றிரவு உடல் நலக்குறைவால் காலமானார். பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதுமட்டுமின்றி பிருத்விராஜின் டிரைவிங் லைசென்ஸ் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். 

 

ஜூன் 15ம் தேதி சச்சிக்கு இடுப்பு எழும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீடு திரும்பிய அன்றைய தினமே திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரிச்சூரில் உள்ள ஜூபிளி மிஷன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 2 நாட்களாக வென்டிலேட்டர் சப்போர்ட் கொடுக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இயக்குநர் சச்சி காலமானார். மலையாள திரையுலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையையே இந்த துக்க செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்காத கொரோனா.... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி...!

மலையாளத்தில் வெற்றி பெற்ற  “அய்யப்பனும் கோஷியும்” தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தமிழ் நடிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இதில் சரத்குமார் - சசிகுமார், சசிகுமார்  - ஆர்யா என பலர் நடிக்க உள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. ஏன் சகோதரர்களான சூர்யா - கார்த்தி கூட நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பு தகவல்கள் கிளம்பின. இந்நிலையில் அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடித்தால் நன்றாக இருக்குமென இயக்குநரே கூறியதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க:  மூன்றாவது திருமணத்தை அறிவித்த பிக்பாஸ் வனிதா... அவருடைய மகளின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன், “அய்யப்பனும் கௌஷியும்’பிஜு மேனன் பாத்திரம் நான் நடித்தால் நன்றாக இருக்குமென பலரும் சொன்னார்கள். இயக்குனரே சொல்லியிருக்கிறார்-மகிழும் முன்னரே அவருக்கு RIP சொல்லும் நிலை-நிலைகுலைத்தது. இன்று படத்தை பார்க்கிறேன்.அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன்.மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.