ஈழத்தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று தொடக்கத்தில் இருந்தே தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  படத்தின் டைட்டில் ‘800’ என்று வெளியாகி, விரைவில் படப்பிடிப்பும் தொடங்க இருக்கும் நிலையில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் விஜய்சேதிபதி அப்படத்தில் நடிக்கக்கூடாது என்று வலியுறுத்து வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வீரரில் படத்தில் நடிப்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்களின் மனதையும் புரிந்துகொண்டு அவர் நடந்தால் அவரின் எதிர்காலத்திற்கு நல்லது’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவும் தெரிவித்திருக்கிறார். விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று இப்படி ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்தாலும், நடிகைகள் குஷ்பு, ராதிகா, நடிகர்கள் சரத்குமார், அரவிந்தன் சிவஞானம் உள்ளிட்டோர் கலைஞனை கலைஞனாக பார்க்க வேண்டும். அவனை வைத்து அரசியல் செய்யக்கூடாது. நடிக்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறிவருகிறார்கள்.

 

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷுடன் நடித்துள்ள “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர்... இந்த புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பார்த்திபன் தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தமிழக மக்களை சற்றே நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. அந்த பதிவில், முத்தையா முரளியின் சூழல் பந்தை, ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி...எதிர்ப்புகள்-எதிர்பார்ப்புகளாக bounce ஆகிவரும் பந்தினை லாவகமாக அடித்து boundary-யைத் தாண்டி சிக்சராக விளாசி,(அதாகப்பட்டது தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என)ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அம்பையர்ஸையும் cheers girls போல ஆடவைத்து ஆரவாரத்துடன் ‘தமிழ்மக்கள்’ செல்வன்ந்தர் ஆகிவிடும் வியூகமோ?என்பதென் யூகம்!!! (காலங்காத்தால...) நடப்பது நன்மையே.so நன்மையே நடக்கும் என நம்புவோம்!!!