நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் முதல் முதலில் இயக்கி, ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் 'புதியபாதை'. இந்த படத்தில் நடிகை சீதா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இருவரும் காதலிக்க துவங்கி திருமணமும் செய்து கொண்டனர்.

மேலும் செய்திகள்: காதல் கிசுகிசுவால் சூப்பர் சிங்கர் பிரகதிக்கு வந்த பிரச்சனை..! கடுப்பேற்றிய நெட்டிசனுக்கு கூல் பதிலடி!
 

கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று, பார்த்திபனை, ஹீரோவாகவும், இயக்குனராகவும் ரசிகர்களை பார்க்க வைத்தது. சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.

மேலும் இந்த படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த ஆச்சி மனோரம்மாவிற்கும் சிறந்த  துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த கதாசிரியர் என்ற விருதையும் தட்டி தூக்கியது.

மேலும் செய்திகள்: தங்க தாரகையாய் மாறிய ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா..! தகதகவென மின்னும் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!
 

இந்நிலையில் சமீப காலமாக வெற்றிப்படங்களில் இரண்டாம் பாகம், இயக்க பட்டுவருவதை போல், 'புதியபாதை' படத்தின் இரண்டாம் பாகத்தை, இயக்குனர் பார்த்திபன் இயக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த படம் குறித்து ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு சமீபத்தில் பதிலளித்த பார்த்திபன் ’புதியபாதை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக இருந்தால் அதில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று நான் கருதினேன். இது குறித்து சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது. விரைவில் ’புதிய பாதை 2’ குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்: லோ நெக் சுடிதாரில்... பார்பி பொம்மை போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!
 

அதே போல் தன்னுடைய ’உள்ளே வெளியே’ திரைப்படத்தை ரீமேக் செய்வதாக இருந்தால் அதிலும் ஹீரோ கேரக்டருக்கு பொருத்தமாக சிம்பு மட்டுமே இருப்பர் என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.   சிம்புவை இவர் தேர்வு செய்து விட்டாலும், சிம்புவிடம் இருந்து என்ன பதில் வரும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.