காதல் கிசுகிசுவால் சூப்பர் சிங்கர் பிரகதிக்கு வந்த பிரச்சனை..! கடுப்பேற்றிய நெட்டிசனுக்கு கூல் பதிலடி!
ஏற்கனவே அசோக் செல்வனை பிரகதி காதலித்து வருவதாக எழுந்த வதந்திக்கு, யாரையும் காதலிக்க வில்லை என நேரடியாகவே கூறிய பிரகதியை, கடுப்பேற்றும் விதத்தில் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்ப அதற்கு கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 , நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் பிரகதி.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தற்போது பல படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி வருகிறார்.
உலக அளவில் நடைபெறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஆல்பம் போன்றவற்றிலும் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் அவருக்கு நடிப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
சோசியல் மீடியாவில் பிரகதிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கச்சக்கம். அவர்களை குஷிப்படுத்துவதற்காகவே செம்ம கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிகர் அசோக் செல்வனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதனால் இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாக வதந்திகள் எழுந்தது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ’தான் தற்போது கல்லூரியில் படித்து கொண்டு இருப்பதாகவும் திருமணம் குறித்த எந்தவித நினைப்பும் தனக்கு இல்லை என்றும், தன்னுடைய கேரியர் தான் முக்கியம் என்றும் அவர் கூறினார். மேலும் தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் இவரை கடுப்பேற்றும் விதத்தில், அசோக் செல்வன் எப்படி இருக்கிறார் என, இவரிடம் நெட்டிசன் ஒருவர் கேட்க அதற்கு மிகவும் கூலாக அவரிடம் தான் கேட்க வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார் அம்மணி.