தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் ஹீரோவாக வலம் வருபவர் நிதின். இவர் டோலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான சுதாகர் ரெட்டியின் மகன். சமீபத்தில் வெங்கு குடுமுலா இயக்கத்தில் நிதின் நடித்த பீஷ்மா என்ற காமெடி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். தொடர் வெற்றிகளை ருசித்து வந்த நிதின் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஷாலினி என்பவரை கரம் பிடிக்க முடிவு செய்தார். இவர்களது நிச்சயதார்த்தம் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத்தில் நடைபெற்றது. 

இதையடுத்து ஏப்ரல் 15 மற்றும்  16 தேதிகளில் துபாயில் பிரம்மாண்டமாக நடைபெறவிருந்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸில் இருந்து இந்திய மக்களை பாதுகாப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.இதனால் நிதின் தனது திருமண திட்டத்தை ரத்து செய்ததோடு மட்டுமல்லாது, துபாயில் தடபுடலாக நடக்கவிருந்த திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் நிறுத்திவிட்டார்.

 

இதையும் படிங்க:  ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம்ம கிளாமர்... 49 வயசிலும் கவர்ச்சியில் குறை வைக்காத ரம்யா கிருஷ்ணன்...!

“ஒவ்வொருவர் வாழ்விலும் திருமணம் முக்கியமான நிகழ்ச்சி. அதைவிட முக்கியம் உயிர். அதனால் திருமணத்தைத் தள்ளி வைத்தோம்” என்றும் விளக்கமளித்தார். கொரோனா வைரஸின் தீவிரம் குறைந்துவிட்டால் துபாயிலேயே திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என இருவீட்டாரும் காத்திருந்தனர். போகிற போக்கைப் பார்த்தால் கொரோனாவின் தீவிரம் குறையும் என்று தோன்றவில்லை. 

 

இதையும் படிங்க: “அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...!

அதனால் வரும் 26ம் தேதி ஐதராபாத் அருகேயுள்ள பண்ணை வீட்டில் நிதினுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். முன்பு எவ்வளவுக்கு எவ்வளவு திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனரோ,  தற்போது அவ்வளவு எளிமையாக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என நிதினின் தந்தை சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.