actor nani abuse girl actress sree reddy complaint

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்பு தேடும் பெண்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டியதுடன் ஸ்ரீலீக்ஸ் என்கிற பெயரில் ஆபாச படங்களை வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் உள்ள அனைவரையுமே அதிரவைத்தார்.

இந்த லிஸ்டில் இயக்குனர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பு அபிராம் உள்ளிட்டோர் சிக்கினர்.

மேலும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும், நடிகர் ராஜேசேகருக்கு பல இளம் பெண்களை அவருடைய மனைவியும், நடிகையுமான ஜீவிதாவே அனுப்பி வைப்பதாக குற்றம் சாட்டினர். இதற்கு ஜீவிதா மறுப்பு தெரிவித்து ஸ்ரீரெட்டிக்கு பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் நடிகை ரோஜா, பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் படுக்கைக்கு அழைக்கப்படுவதில்லை என்று கூறியதுடன். ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ள நடிகர் ராஜசேகருடன் இணைந்து தான் இரண்டு படங்கள் நடித்துள்ளதாகவும். தன்னுடைய கணவர் செல்வமணிக்கு அவர் மிகவும் நெருங்கிய நண்பர் என்றும் அவர் இதுவரை தன்னுடைய மனைவியை தவிர அவரை யாருடனும் தான் பார்த்தது கூட இல்லை என பதில் கொடுத்தார். ரோஜா இப்படி கூறியதற்கு ஸ்ரீரெட்டி மறுப்பு தெரிவித்தது மட்டும் இன்றி நடிகை ரோஜாவையும் கண்டித்து ட்விட் போட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் நானி, ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்ப்படுதியுள்ளது.

நடிகர் நானி, தமிழில் நடிகை சமந்தாவுடன் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய 'ஈ' கெளதம் வாசுதேவ் மேனன் தயாரித்த 'வெப்பம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஆரம்பமாக உள்ள பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியையும் இவர் தான் தொகுத்து வழங்க உள்ளார்.