Vijay Antony : பிரபல நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை மிர்னாலினி நடிப்பில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி உலக அளவில் வெளியான திரைப்படம் தான் ரோமியோ. மக்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் திரை உலகில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான "சுக்கிரன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களம் இறங்கியவர் தான் விஜய் ஆண்டனி. கடந்த 19 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பல நல்ல திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான "நான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் தமிழ் திரையுலகில் விஜய் ஆண்டனி களமிறங்கினார். 

இவருடைய திரைப்படங்களுக்கு என்று இப்போது வரை ஒரு தனி மவுசு உள்ளது. ஏற்கனவே இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி இவருடைய "ரோமியோ" திரைப்படம் வெளியான நிலையில், "அக்னி சிறகுகள்", "ஹிட்லர்", "காக்கி" மற்றும் "வள்ளி மயில்" உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய நடிப்பில் இவ்வாண்டு இறுதிக்குள் வெளியாக உள்ளது. 

குண்டக்கமண்டக்க கேள்வி கேட்ட "பயில்வான்".. பலர் முன் பட்டென "நோஸ் கட்" செய்த விஷால் - அப்படி என்ன கேட்டார்?

பிசியான இயக்குனராகவும், பிஸியான நடிகராகவும், இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வரும் விஜய் ஆண்டனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை தற்பொழுது வெளியேற்றுகிறார். அதில் பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து கொல்லும் திரு. ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கு இந்த கடிதத்தை எழுதுவதாக அவர் கூறியிருக்கிறார்.

View post on Instagram

"இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம், தியேட்டர்ல போய் பாருங்க. ரோமியோவை அன்பே சிவம் ஆக்காதீங்க" என்று Vijay Antony வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Thug Life படத்தால் வாக்களிக்க வராத STR.. கதைக்கு ஏற்ற சரியான ஸ்பாட்டில் படப்பிடிப்பு - எங்கே தெரியுமா?