நடிகர் மோகன்லாலின் வீடு வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. அந்த ஆடம்பர வீட்டின் ஒரு நாள் வாடகை எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Actor Mohanlal Luxury House : மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டார்களாக வலம் வருபவர்கள் தான் மோகன்லால் மற்றும் மம்முட்டி. இவர்களில் மோகன்லாலுக்கு 65 வயதும், மம்முட்டிக்கு 73 வயதும் ஆகிறது. ஆனால் இந்த வயதிலும் அவர்கள் இருவரும் யங் ஆக இருப்பதால், தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்கள். நடிகர் மோகன்லால் இந்த ஆண்டு இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார். அதில் எம்புரான் 350 கோடியும், துடரும் 250 கோடியும் வசூலித்து இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது.
மறுபுறம் மம்முட்டியும் ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து படங்களில் நடித்து வருகிறார். நடிகர் மம்முட்டிக்கு சொந்தமாக கேரளாவில் ஏராளமான வீடுகள் உள்ளன. அதில் கொச்சி பனம்பள்ளியில் அவர் வசித்து வந்த வீட்டை அண்மையில் கெஸ்ட் ஹவுஸ் ஆக மாற்றினார். கேரளாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. மம்முட்டியின் வீடு என்பதால் அதில் தங்க சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மோகன்லால் கெஸ்ட் ஹவுஸின் வாடகை இவ்வளவா?
மம்முட்டியை தொடர்ந்து நடிகர் மோகன்லாலும் தனது கெஸ்ட் ஹவுஸை தற்போது வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால் கேரளாவில் அல்ல, அவரது ஊட்டி கெஸ்ட் ஹவுஸை தான் தற்போது வாடகைக்கு விட்டிருக்கிறார் மோகன்லால். அங்கு ஒரு நாள் தங்க, ரூ.37 ஆயிரம் வாடகை வசூலிக்கப்படுகிறதாம். அந்த கெஸ்ட் ஹவுஸில் மூன்று பெட்ரூம் உடன் அனைத்து விதமான ஆடம்பர வசதிகளும் நிரம்பி இருக்கிறதாம். அதுமட்டுமின்றி ஒரு ஓவிய கேலரியும் அங்கு பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளதாம்.
அதுமட்டுமின்றி தான் நடித்த மரைக்காயர் படத்திற்காக பயன்படுத்திய டம்மி துப்பாக்கிகளை அங்கு காட்சிப்படுத்தி வைத்திருக்கிறாராம் மோகன்லால். அந்த வீட்டில் மற்றுமொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், மோகன்லால் ஊட்டிக்கு சென்று தங்கும்போதெல்லாம், அவருக்கு ருசியாக சமைத்து போடும் சமையல்காரர் தான் தற்போது அங்கு வாடகைக்கு தங்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சமைத்துப்போட நியமிக்கப்பட்டு உள்ளாராம். இதனால் ஊட்டியில் மோகன்லால் வீட்டில் தங்க டிமாண்ட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
