நடிகர் மனோபாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் யோகிபாபு உடன் கேக் வெட்டி கடைசியாக தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றன.

நடிகர் மனோபாலா நேற்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரின் மறைவு தமிழ் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் ஜொலித்த மனோபாலா திடீரென மரணமடைந்ததால் அதிர்ச்சி அடைந்த பிரபலங்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மனோபாலா சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சிறந்த பங்களிப்பை ஆற்றி உள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார் மனோபாலா. அவரின் மறைவுக்கு குக் வித் கோமாளி பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... கமலின் ஆழ்வார்பேட்டை கேங்கில் அங்கமாக இருந்த மனோபாலா... கடைசி வரை நிறைவேறாமல் போன அவரின் நீண்ட நாள் ஆசை

நடிகர் மனோபாலா சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தும் வந்தார். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர நடிகர் யோகிபாபு நாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் மனோபாலா கடைசியாக பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ வெளியாகி உள்ளது.

Scroll to load tweet…

மனோபாலாவின் கடைசி வீடியோவை அவருடன் அப்படத்தில் நடித்து வரும் நடிகர் சாம்ஸ் வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் நடிகர் யோகிபாபு உள்பட படக்குழுவினர் அனைவரும் சூழ்ந்து நின்று அவருக்கு கைதட்டி பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாட, மனோபாலாவும் சந்தோஷமாக கேக் வெட்டும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

இதையும் படியுங்கள்... ஒரு நாளைக்கு 200 சிகரெட்... செயின் ஸ்மோக்கராக இருந்த மனோபாலா அதிலிருந்து விடுபட்ட கதை தெரியுமா..!