தமிழ் ரசிகைகளின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். தமிழில் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம் என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இடையில் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்த மாதன் முழுக்க இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். “இறுதிச்சுற்று” படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த மாதவன், தற்போது தமிழில் முழுகவனம் செலுத்தி வருகிறார். அதன்பின்னர் விஜய் சேதுபதி, மாதவன் காம்பினேஷனில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. தற்போது அனுஷ்காவுடன் “நிசாப்தம்” படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

 

மேலும் செய்திகள்: பிரபல கிரிக்கெட் வீரரால் தனக்கு நேரத்தை மிகவும் மோசமான அனுபவம் குறித்து முதல் முறையாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
 

ஓவராக அலட்டாமல் அசராமல் நடிக்கும் மாதவனுக்கு என்று கோலிவுட்டில் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தமிழில் மட்டுமல்ல இந்தியிலும் மாதவனுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர், தனக்கு நேரத்தை மோசமான அனுபவம் குறித்தும், இதன் மூலம் தான் கற்று கொண்டதையும் முதல் முறையாக கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்: சாக கிடந்தேன்... மனைவி பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு அழுத பீட்டர் பால்!
 

இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு 8 வயது இருக்கும் போது, பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பலர் ஓடி வந்து அவரிடம், ஆட்டோகிராப் வாங்கினார்கள். நானும் அவரிடம் ஓடி சென்று கையெழுத்து வாங்க நின்றேன். அப்போது அவர் யாரோ ஒருவரிடம் பேசி கொண்டே நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கை எழுத்து போட்டார்.

உண்மையில் அது மிகவும் அவமானமாக தனக்கு தெரிந்தது. அந்த நிகழ்வுக்கு பின், அனைவரிடமும் நாம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். தன்னிடம் வந்து யார் ஆட்டோகிராப் வாங்கினாலும் நான் அவர்கள் கண்களை பார்த்து தான் போடுவேன் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரபல கிரிக்கெட் வீரர் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.