‘கழுகு’ பட நடிகர் கிருஷ்ணாவுக்கு மிக எளிய முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது அந்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் கிருஷ்ணாவின் ஆரம்பகால வாழ்க்கை
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ‘கழுகு’ படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் கிருஷ்ணா. இவர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பி ஆவார். இவரது தந்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.கே சேகர். அமெரிக்காவில் நிதித் துறையில் எம்.பி.ஏ பட்டம் பெற்ற அவர், ஐடி துறையில் சில காலம் பணியாற்றினார். அதன் பின்னர் முறையாக நடனம் பயின்று நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
கிருஷ்ணா நடித்துள்ள படங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் கிருஷ்ணா. அதன் பின்னர் இவர் வல்லினம், யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன், வன்மம், யாக்கை, நிபுணன், விழித்திரு, வீரா, களரி, மாரி 2, கழுகு 2, ராயர் பரம்பரை பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் இவரது சில படங்கள் வெற்றி பெற்ற நிலையில், சில படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
தயாரிப்பாளரான நடிகர் கிருஷ்ணா
மேலும் z5 தெலுங்கில் ஹை ப்ரீசிஸ்ட் என்கிற தொடரையும், ஆஹா தெலுங்கில் லாக்டு என்கிற தொடரையும், டிஸ்னி ஹாஸ்டாரில் ஜான்சி என்கிற தொடரையும் தயாரித்திருந்தார். தமிழில் பேராஷூட் என்ற தொடரை டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தயாரித்திருந்தார். தற்போது சிலர் வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்பவருடன் திருமணமாகி கடந்த 2016-ம் ஆண்டு விவகாரத்தானது. இந்த நிலையில் அவருக்கு மிக எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது.
சிம்பிளாக நடந்த கிருஷ்ணாவின் திருமணம்
கோயில் ஒன்றில் திருமணத்தை முடித்த அவர், அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து புதிய ஆரம்பம் என பதிவிட்டுள்ளார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
