பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி VJ தாராவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்
தமிழ் சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வரும் VJ தாராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை தாரா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜே தாரா
சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், பல பிரபலங்களை பேட்டி எடுத்தும் பிரபலமானவர் விஜே தாரா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது சமூக வலைதளங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளியாக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
தனித்துவமான தொகுப்பாளினி விஜே தாரா
சினிமா பிரபலங்களை பேட்டி எடுப்பது, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, விருது விழாக்களை தொகுத்து வழங்குவது பன்முகத்திறமையாளரான தாரா பலருக்கும் பிடித்த தொகுப்பாளனியாக அறியப்படுகிறார். அவரது இயல்பான பேச்சுத்திறன், நகைச்சுவை உணர்வு, பிரபலங்களை கேள்வி கேட்கும் விதம், ரசிகர்களிடம் பழகும் விதம் ஆகியவை அவரை சிறந்த தொகுப்பாளனியாக மாற்றின.
நடிகையாக மாறிய விஜே தாரா
பிரபலங்களை பேட்டி எடுக்கும் பொழுது தாரா கேள்விகளை நேர்த்தியாகவும், கூர்மையாகவும் கேட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பார். அவரின் நிகழ்ச்சி தொகுக்கும் பாணிக்கு ஒரு தனித்துவம் இருக்கும். தனது திறமையாலும், பன்முகத்தன்மையாலும் தமிழ் திரையுலகிலும் தொலைக்காட்சித் துறையிலும் தாரா தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
விஜே தாரா நடித்த நாடகங்கள்
அவருக்கு சில சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அன்புடன் குஷி’, ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி: போன்ற தொடர்களில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ‘அபி டெய்லர்’ உள்ளிட்ட இன்னும் சில படங்களிலும் நடித்துள்ளார்.
விஜே தாராவின் திருமண நிச்சயதார்த்தம்
நடிகை, தொகுப்பாளினி என்பதை தாண்டி தாரா மாடல் அழகியாகவும், பாடகியாவும் அறியப்படுகிறார். அவர் தனது சமூக வலைதளப்பக்கங்களில் புடவை மற்றும் நவீன உடைகளில் இருக்கும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகின்றன. மேலும் லைக்குகளையும் குவிக்கின்றன. எந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக விஜே தாரா அறிவித்திருந்தார்.
காதலரை கரம்பிடிக்கும் விஜே தாரா
இளமதியன் என்பவரை தாரா காதலித்து வத்த நிலையில், அவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை தாரா தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தாராவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.