காரைக்காலில் கடந்த 1995ம் ஆண்டு பிறந்தவர்தான் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் பாலா அவர்கள். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் செய்து வரும் பல நல்ல காரியங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பாலன் ஆகாஷ் முதல் சமூக சேவகன் பாலா வரை..
சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்த அதே சமயம் படிப்பிலும் மிக மிக கெட்டியான மாணவர்தான் பாலா என்கிற பாலன் ஆகாஷ். குறிப்பாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர் பள்ளி அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 500க்கு 490 மதிப்பெண் எடுத்து சிறந்த மாணவராக திகழ்ந்தவர் பாலா.
விஜய் டிவியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் அமுதவாணன் அவர்களுடைய ரசிகனாக திகழ்ந்த பாலா, சென்னைக்கு வந்ததும் அமுதவாணன் வீட்டில் தான் சிறிது காலம் தங்கி இருந்து, தனக்கான சின்னத்திரை வாய்ப்பை தொடர்ச்சியாக தேடி வந்துள்ளார். தன்னுடைய உருவத்தாலும், நிறத்தினாலும் பல இடங்களில் பல அவமானங்களை தாங்கிக்கொண்டு நகர்ந்துகொண்டே இருந்ததாக பல நேர்காணல்களில் மனம் நொந்து பாலா பேசியதை நம்மால் பார்க்க முடிகிறது.
என்னது... மேல லாரி ஏத்திட்டு சாரியா? யோகி பாபுவின் காமெடி கலாட்டாவுடன் வெளியான 'லக்கி மேன்' ட்ரைலர்!
ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் பணிவாற்றி வரும் தாம்சன் அவர்களுடைய உதவியாள் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்க. கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொண்டு தன்னை அடுத்த அடுத்த கட்டத்திற்கு உயர்த்திக் கொண்டே இருந்தார் பாலா. பாலாவின் இயல்பான நடிப்பும், அவர் சட்டென்று போடும் கவுண்டர்களும் சின்னத்திரை நடிகர்கள் முதல் சிவகார்த்திகேயன் வரை அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
பல மேடைகளில் விஜய் டிவியில் இருந்து சென்று இன்று வெள்ளித்தறையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் அவர்கள், பாலாவை வியந்து பாராட்டியதும் உண்டு. தற்பொழுது விஜய் டிவியின் நட்சத்திர நடிகராக மாறி உள்ள பாலா பல வெள்ளித்திரை படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்த சூழலில் தனக்கு கிடைக்கும் பணத்தை கொண்டு ஆரம்ப காலத்தில் இருந்தே பள்ளி மாணவர்களுக்கு உதவுவது தொடங்கி பல்வேறு பொதுநல விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறார் அவர்.
அண்மையில் பிரபல நடிகர் பாவா லட்சுமணன் அவர்களுடைய காலில் பிரச்சனை ஏற்பட்டு சில விரல்கள் நீக்கப்பட்ட நிலையில், அவருடைய மருத்துவ செலவிற்கு கூட பணம் கொடுத்து உதவியவர் பாலா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தனக்கு கிடைக்கும் சிறிய அளவிலான பணத்தை கூட முழுமையாக தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் சமூக சேவைகளுக்காக பயன்படுத்தி வரும் பாலாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு ஈரோட்டுப் பகுதிக்கு அருகே உள்ள மலை கிராமத்தில் வசிக்கும் சுமார் 8,000 மக்கள் பயன்பெறும் வகையில், ஐசியு வசதி கொண்ட ஒரு சிறியரக ஆம்புலன்ஸை தனது சொந்த பணத்தில் அந்த கிராம மக்களுக்கு அவர் பரிசளித்திருக்கிறார்.
கர்நாடகாவில் 50 கோடி வசூல் செய்த 'ஜெயிலர்'..! தலைவரை கொண்டாடும் ரசிகர்கள்..!
