நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணம்..? தீயாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ!
தெலுங்கு திரையுலகில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணமடைந்து விட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவிய நிலையில், இதற்கு அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் கோட்டா சீனிவாசராவ். இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில், முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும், தந்தை கதாபாத்திரத்திலும், வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு தாத்தா போன்ற வேடங்களில் நடித்துள்ளார்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதனை உள்வாங்கிக் கொண்டு அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பை வெளிப்படுத்துவது இவரின் தனி சிறப்பு எனலாம்.
இவர் தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமி' படத்தில், பெருமாள் பிச்சை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து... தன்னுடைய முதல் படித்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இப்படத்தை தொடர்ந்து குத்து, ஜோர், ஜெய் சூர்யா, திருப்பாச்சி, பரமசிவன், என விஜய்... அஜித்.. போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக டஃப் கொடுத்தார்.
கடைசியாக இவர் தமிழில் 2018 ஆம் ஆண்டு 'காத்தாடி' என்கிற படத்தில் நடித்திருந்தார். அதே போல் கடந்தாண்டு தெலுங்கில் வெளியான 'ஹீரோ' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். 80 வயதாகும் இவர், தன்னுடைய குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் வசித்து வரும் நிலையில், திடீரென இவருக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டு... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி... மரணம் அடைந்ததாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவியது.
Breaking: 'அசத்தப்போவது யாரு' ஸ்டாண்ட் அப் காமெடியன் கோவை குணா அதிர்ச்சி மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!
இந்த தகவல் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இப்படி பரவிய தகவல் வதந்திக்கு நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த ரூமருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்த அவர் தன்னுடைய வீடியோவில் கூறியுள்ளதாவது, 'நான் நல்ல உடல் நலமுடன் இருப்பதாகவும்... இது போன்ற வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்." இதை அடுத்து ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோட்டா ஸ்ரீனிவாச ராவ் நடிப்பை தொடர்ந்து அரசியலிலும் களம் கண்டவர். விஜயவாடா கிழக்கு பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் இவரை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு இவருக்கு 2015 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது. மேலும் இதுவரை ஒன்பது முறை நந்தி விருதும், சிறந்த குணச்சித்திர நடிகருக்கான சைமா விருதையும், அல்லு ராமலிங்கம் என்கிற உயரிய விருதையும் பெற்றுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.