Yashika anand: ஸ்கின் கலர் உடையில்.. மிதமிஞ்சிய கவர்ச்சியால் ரசிகர்கள் மனதை ரணகளம் செய்த யாஷிகா! ஹாட்போட்டோஸ்!
நடிகை யாஷிகா ஆனந்த், ஸ்கின் கலர் உடை அணிந்து... விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'இருட்டு அறையில் முரட்டு குத்'து படத்தில், எல்லை கடந்த கவர்ச்சியை காட்டி அடல்ட் பட நாயகி என பெயர் எடுத்த யாஷிகாவுக்கு, இப்படம் வெற்றி பெற்றாலும், சரியான வாய்ப்புக்கள் கிடைக்காததால் திடீர் என பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் என்ட்ரி கொடுத்தார்.
18 வயதிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் என்ட்ரி கொடுத்த இவர், மிகவும் மெச்சூர்டாக விளையாடி ரசிகர்கள் மனதை கவர்ந்த போதிலும், ஐஸ்வர்யா தத்தாவுக்குக்கு ஓவராக ஜால்ரா போடதன் விளைவாக வெற்றிபெறும் வாய்ப்பை தவற விட்டார்.
எனினும் 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த யாஷிகா பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்... இவரின் திரையுலக வாழ்க்கை சூடு பிடிக்க துவங்கியது.
அடுத்தடுத்து எஸ்.ஜே.சூர்யா, மகத், போன்றவர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கினார். சில படங்களில் இரண்டாவது நாயகியாகவும் நடித்து வந்தார்.
Breaking: 'அசத்தப்போவது யாரு' ஸ்டாண்ட் அப் காமெடியன் கோவை குணா அதிர்ச்சி மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!
ஆனால் எதிர்பாராத விதமாக, நண்பர்களுடன் பார்ட்டி செய்துவிட்டு வரும் வழியில்... மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். இது அவரின் திரையுலக வாழ்க்கையையே கேள்வி குறியாக மாற்றியது.
முதுகு, கால், கை என உடலில் பல்வேறு இடங்களில் அடிபட்டு மருத்துவமனையில் சுமார் 6 மதத்திற்கு மேல் சிகிச்சை பெற்றார். மேலும் இந்த விபத்தில் இவரின் தோழி உயிரிழக்க நேர்ந்தது.
44 வயதில்... அருவி சீரியல் நடிகை லாவண்யாவுக்கு நடந்த திருமணம்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
ஒருவழியாக அந்த கொடூர சம்பவத்தில் இருந்து மீண்டு, மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வரும்... யாஷிகா, அவ்வப்போது கண்களை கவரும் விதமாக விதவிதமான உடையில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது ஸ்கின் கலர் உடையில்... செம்ம ஹாட்டாக் போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை ரணகளம் செய்துள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்துவருகிறது .
அதே போல் மீண்டும் திரையுலகில் பிஸியாகியுள்ள யாஷிகா கைவசம் சுமார் 5 படங்கள் உள்ளன. இந்த படங்கள் இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.