”பிகில்” பட ஹீரோவின் அடுத்த படம்... டீசருக்கு கிடைச்ச செம்ம ரெஸ்பான்ஸ்...!

பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த கதிர், தனது அடுத்த படமான ”ஜடா” டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ”பரியேறும் பெருமாள்” படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கதிர், விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருந்தார். அட்லீ இயக்கத்தில், ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த ”பிகில்” திரைப்படம் கடந்த 24ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த அனைத்து படல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. மேலும் திரையிடப்பட்ட திரையரங்குகளில் எல்லாம் வெற்றி வாகை சூடியுள்ள ”பிகில்” திரைப்படம், வசூலிலும் கலக்கலாக கல்லா கட்டி வருகிறது. 

”பிகில்” திரைப்படத்திற்கு பிறகு கதிர், ”ஜடா” என்ற படத்தில் நடித்து வருகிறார். போயட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை குமரன்.ஏ இயக்குகிறார். ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவில், சாம் சி.எஸ். இசையில் படம் உருவாகி வருகிறது. ஃபுட்பால் விளையாட்டை மையமா வச்சி எடுக்கப்படுற இந்த படத்தோட, டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதில் ஹீரோயினா ரோஷினி பிரகாஷ் மற்றும் யோகி பாபு, ஸ்ரீதர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.<

/p>

இந்நிலையில் ”ஜடா” திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக அப்படத்தின் ஹீரோ கதிர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கார்.பரியேறும் பெருமாள் வெற்றியைத் தொடர்ந்து, கதிரை அவரை மீண்டும் திரையில் காண ஆவலாக உள்ள நிலையில், இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.