நாளை முதல் வேளாண் திருவிழா சென்னை நந்தம்பாக்கத்தில் துவங்க உள்ள நிலையில், வேளாண் தொழிலாளர்களுக்காக, பொதுமக்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் நடிகர் கார்த்தி. 

நடிகர் கார்த்தி திரைப்படங்களில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும்... அதை தாண்டி, உழைக்கும் வர்க்கமான உழவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தன்னுடைய அண்ணன் சூர்யா 'அகரம்' அறக்கட்டளை மூலம், பல மாணவர்களை படிக்க வைத்து வருவது போல், இவரும் வேளாண் மக்களுக்காக 'உழவன்' என்கிற அறக்கட்டளையை துவங்கி, விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இவரின் அறக்கட்டளை மூலம் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் மூலம் பல விவசாயிகள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், தற்போது நடிகர் கார்த்தி.. பொதுமக்களுக்கு மிகவும் உருக்கமான கோரிக்கை ஒன்றை வீடியோ மூலம் வைத்துள்ளார். இந்த வீடியோவில், கார்த்தி கூறியுள்ளதாவது... "வரும் ஜூலை 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வேளாண் வர்த்தக திருவிழா ஒன்றை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 

உறவினர்கள் சொத்தை அபகரித்த விக்னேஷ் சிவன் தந்தை! நயன் - விக்கி மீது க்ரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!

இது குறித்த தகவலை மிகவும் அக்கறையுடன் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, “நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை இந்த வேளாண் வர்த்தக திருவிழாவில் நேரடியாக விற்பனை செய்ய இருக்கின்றனர். அனைவரும் குடும்பத்துடன் இந்த திருவிழாவுக்கு வந்து வேளாண் மக்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்".

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் வேளாண் மக்கள் ஒன்று கூடி நேரடியாக தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்வதால், கண்டிப்பாக பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் பாவனிக்கு என்ன ஆச்சு? திடீர் என நடந்த அறுவை சிகிச்சை... புகைப்படத்துடன் கூறிய அதிர்ச்சி தகவல்!

Scroll to load tweet…