உலக நாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த பின், பட வேலைகளிலும், அரசியல் சம்பந்தமான வேலைகளிலும் முழு மூச்சோடு ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசனுக்கு, நாளை காலில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக மக்கள் நீதி மய்யம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
 
"2016ம் ஆண்டு தன் வீட்டு மாடிப்படியிலிருந்து எதிர்பாராதவிதமாக கமல், தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது சிகிக்சை எடுத்த கொண்ட அவருக்கு காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று வைக்கப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் பிஸியாக இருந்ததால் அக்கம்பியை அகற்றவில்லை. தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி நாளை(அக்.,22) அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சில நாட்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் தன் பணிகளை தொடங்குவார்".

எனவே கமல்ஹாசன் சில வாரங்கங்களுக்கு பிறகே, மீண்டும் அரசியல் மற்றும் பட வேலைகளை தொடர்வார் என்பது தெரிகிறது.